சாகாவிடம் மிரட்டல்! கெரியரை காலி செய்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. பிசிசிஐயிடம் "போரியா" மாட்டியது எப்படி?
சென்னை: பிசிசிஐ அமைப்பு பிரபல கிரிக்கெட் செய்தியாளர் போரியா மஜும்தாரை தடை செய்துள்ளது. அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு ஆண்டுகள் தடை என்றால் போரியா மஜூம்தார் இந்த காலத்தில் பிசிசிஐயில் பதிவு செய்த கிரிக்கெட் வீரர்களை தொடர்பு கொள்ள முடியாது. அவர்களிடம் பேட்டி எடுக்க முடியாது.
பிசிசிஐ நிகழ்வு எதிலும் அவர் கலந்து கொள்ள முடியாது. பிசிசிஐ சார்பாக நடக்கும் கூட்டங்களை கவர் செய்ய முடியாது. பிசிசிஐ அமைப்பிற்கு சொந்தமான எந்த விதமான கிரிக்கெட் நிகழ்வு, சங்க நிகழ்விலும் போரியா கலந்து கொள்ள முடியாது.

கிட்டத்தட்ட போரியாவின் கெரியரை இந்த சம்பவம் காலி செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கிரிக்கெட் வீரர் விர்த்திமான் சாகாவை போரியா மிரட்டியதுதான் புகார். சாகாவிற்கு மெசேஜ் செய்த போரியா.. எனக்கு இன்டர்வியூ கொடு என்று கேட்டு இருக்கிறார். அதற்கு சாகா மறுத்துள்ளார்.
இதையடுத்து கோபமாக பேசிய போரியா.. நீ ஜனநாயக முறைப்படி மறுக்கிறாய் என்றால் ஓகே.. ஆனால் ஒன்று சொல்கிறேன்.. 11 கீப்பர் இருந்தால் அதில் 1 நல்ல கீப்பரைத்தான் தேர்வு செய்வார்கள். ஆனால் நீ 11 மோசமாக செய்தியாளர்களை பேட்டி கொடுக்க தேர்வு செய்கிறாய். நல்ல செய்தியாளர் ஒருவரை தேர்வு செய்தால் உன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.
அதன்பின் போரியா செய்த போன் காலை சாகா எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த போரியா, நீ எனக்கு திரும்பி கால் செய்யவில்லை. நான் அவமானங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். இதை நான் விட மாட்டேன். நீ செய்ய கூடாத காரியத்தை செய்துவிட்டாய் என்று போரியா சாகாவை மிரட்டும் வகையில் பேசி இருந்தார்.

இதன் ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்த சாகா.. நான் இந்திய கிரிக்கெட்டுக்கு அவ்வளவு செய்தேன். ஆனால் ஒரு "மதிப்பிற்குரிய" செய்தியாளரிடம் இருந்து இது போன்ற விஷயங்களை நான் எதிர்கொள்ள வேண்டியதாகி இருக்கிறது. ஜர்னலிசம் இவ்வளவு மோசமான நிலையை அடைந்துவிட்டது என்று விமர்சனம் செய்தார்.
ஆனால் போரியா பெயரை குறிப்பிட சாகா மறுத்துவிட்டார் . அவரின் பெயரை மறுத்துவிட்டுதான் சாகா இந்த ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்தார். அந்த ஜர்னலிஸ்ட் பெயரை குறிப்பிட போவதில்லை என்றும் சாகா மற்ற போஸ்ட்டுகளில் தெரிவித்து இருந்தார். ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த செய்தியாளர் போரியாதான் என்று எளிதாக கண்டுபிடித்துவிட்டனர். இதற்கு காரணம் ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
போரியா பொதுவாக you என்பதை தவறாக ypu என்று அடிக்கடி எழுதுவார். பலமுறை இப்படி அவர் எழுதி இருக்கிறார். இதேபோல் சாகா ஷேர் செய்து இருந்த ஸ்கிரீன் ஷாட்டிலும் ypu என்ற தவறு இருந்தது. இதை வைத்துதான் ரசிகர்கள் அது போரியாதான் என்று கண்டுபிடித்தனர். சாகாவை மிரட்டியது போரியாதான் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து பிசிசிஐ அமைப்பிடம் டேக் செய்து புகார் வைத்தனர்.
முதலில் பிசிசிஐ அமைப்பிடம் போரியா பெயரை சொல்ல மாட்டேன் என்று சாகா கூறிய நிலையில், இந்த சம்பவங்களுக்கு பிறகு பிசிசிஐ அமைப்பின் விசாரணையில் போரியா பெயரை சாகா வெளிப்படையாக தெரிவித்தார். அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்தான் அன்று போரியாவை காட்டிக்கொடுத்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications