திடீர் மாரடைப்பால் உயிரிழந்த திருமகன் ஈவெரா! இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்! அறிகுறி என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இப்போதெல்லாம் மாரடைப்பு இளைஞர்கள் மத்தியில் அடிக்கடி ஏற்பட என்ன காரணம் இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா.

46 வயதே ஆன திருமகன் ஈவெராவுக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 திருமகன் ஈவெரா

திருமகன் ஈவெரா

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் திருமகன் ஈவெரா உயிரிழந்து விட்டதாகக் கூறியனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவருக்கு பூர்னிமா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். திருமகன் ஈவெரா கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல்முறையாகக் களமிறங்கியனர். இந்தத் தேர்தலில் திருமகன் ஈவெரா மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 46 வயதே ஆன திருமகன் ஈவெராவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அதிகரிக்கும் மாரடைப்பு

அதிகரிக்கும் மாரடைப்பு

அவர் மட்டுமில்லை.. முன்பு பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் ஏற்பட்டு வந்த மாரடைப்பு இப்போது, இளைஞர்கள் மத்தியிலும் அதிகம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இளைஞர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றர். 30 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது 13% அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்திய இளைஞர்களுக்குக் குறைந்த வயதிலேயே. அதிலும் அவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் மாரடைப்பு ஏற்படுவதாக இந்தியன் ஹார்ட் அசோசியேஷன் தெரிவிக்கிறது.

 இந்தியாவில் அதிகம்

இந்தியாவில் அதிகம்

மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இதய பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் உட்கார்ந்தே இருப்பது, நீரிழிவு நோய், மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இளைஞர்களிடையே திடீர் மாரடைப்பு (SCA) அதிகரித்து வருகின்றன. இருப்பினும், சில நோயாளிகளுக்கு அறியப்பட்ட ஆபத்து காரணிகள் எதுவும் இல்லை. இதில் இளைஞர்கள் பலருக்கு எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் மாரடைப்பு ஏற்படும் ஆபத்துகள் உள்ளது. எனவே, இது குறித்து நாம் இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.

 பிரபலங்கள்

பிரபலங்கள்

கனடா சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், கன்னா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட படங்களில் நடித்த சேதுராமன், பிரபல பாடகர் கேகே, 24 வயது பெங்கலி நடிகை அங்கிலா சர்மா என்று பல்வேறு பிரபலங்களும் இளம் வயதில் உயிரிழந்த மோசமான சம்பவங்களும் நடந்துள்ளன. இருதய நோய்கள் பல காலமாகவே ஏற்பட்டு வருகிறது. ஆனால், முன்பு வயதான மக்கள் மற்றும் ஏற்கனவே இணை பாதிப்பு கொண்டவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த இந்த பாதிப்பு இப்போது இளைஞர்களிடம் அதிகம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் எச்சரிக்கைகளையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது.. இதற்கான அறிகுறிகளையும் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

 அறிகுறிகள்

அறிகுறிகள்

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு ஒருவருக்கு பொதுவாக ஏற்படும் சில அறிகுறிகள் உள்ளன. மார்பில் அசௌகரியம் ஏற்படும், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, மூச்சுத் திணறல், திடீரென பலவீனம் மற்றும் லேசான தலைச்சுற்றல் ஆகியவை ஏற்படும். சிலருக்கு மயக்கம் போன்ற உணர்வும் கூட ஏற்படும். சிலருக்கு திடீரென அதிக வேர்வை ஏற்படும். இதையெல்லாம் வைத்து ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்பதை ஓரளவுக்குக் கண்டறியலாம்.

 என்ன காரணம்

என்ன காரணம்

பெரும்பாலும் எந்தவொரு உடல் உழைப்பும் இல்லாமல்.. ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மாரடைப்பு வர ஆபத்து அதிகம். புகைபிடித்தல், போதைப்பொருள், அதிக மது அருந்துதல், உடல் பருமன், சீராக உணவு எடுத்துக் கொல்லாமல் இருப்பது, ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் அதிக மன அழுத்தத்துடன் பணிபுரியும் சூழல் உள்ளிட்டவையே பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது. மேலும், குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு வந்திருந்தால்.. அல்லது நீரிழிவு பாதிப்பு இருந்தாலும் திடீர் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

 தடுக்க என்ன செய்யலாம்

தடுக்க என்ன செய்யலாம்

மாரடைப்பு ஏற்படும்போது, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவ உதவியைப் பெற வேண்டும். அதேநேரம் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க சில எளிய வழிகள் உள்ளன. முதலில் உடல் பருமன் இருந்தால் எடையைக் குறைத்த சரியான எடையில் உடலைப் பராமரிக்கவும். அடுத்து புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்தவும்.. ஆரோக்கியமான அனைத்து சத்துகளையும் கொண்ட உணவைச் சாப்பிடுங்கள். ஒரு வாரத்திற்குக் குறைந்தது 150 நிமிடங்கள் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதேபோல மனநலனை காக்கவும் அழுத்தத்தைக் குறைக்கவும் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளங்கள். இதன் மூலம் மாரடைப்பு பாதிப்புகளைக் குறைக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+