மாமன்னன்’ ரத்னவேல் கதாபாத்திரம் .. எத்தனை ‘வெர்ஷன் வீடியோக்கள்’ - நெட்டிசன்களின் ரியாக்சன்
மாமன்னன் திரைப்படம் சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிய ட்விட்டரை போய் பாருங்கள். அனல் பறக்கிறது. மாமன்னனாக நடித்த வலுவேலு கதாபத்திரத்தைவிட, ஏன் உதயநிதி நடித்த அதிவீரன் கதாபாத்திரத்தைவிட, பகத்பாசில் நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏன் ரத்னவேல் கதாபாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன்பின்னணியில் உள்ள விஷயங்கள் என்ன? ஏன் ரத்னவேல் கதாபாத்திரம் கொண்டாடப்படுகிறது என்பதை எல்லாம் உங்கள் கருத்துக்களுக்கு விட்டுவிடுகிறேன். ஏனெனில் ஒவ்வொருவரும் ரத்னவேல் பாண்டியனை தங்களுக்கு ஏற்றவாறு பாடல்களை எடிட் செய்த மிக்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 29-ம் தேதி 'மாமன்னன்' திரைப்படம் வெளியானது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டை பெற்றிருந்தது,.
இந்நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. திரையரங்குகளை விட ஓடிடியில் படம் வெளியான பிறகு படத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. பலரும் மாமன்னன் படம்குறித்து புதிதாக விமர்சனங்கள் எழுதுகிறார்கள். படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் குறித்தும் எழுதி வருகிறார்கள்.
05 #மாமன்னன் pic.twitter.com/YOhGJsnWhX
— 2.0 (@narachisulthan) July 29, 2023
இந்நிலையில் எதிர்பாராத விஷயம் ஒன்று நடந்துள்ளது. மாமன்னன் படத்தில் உள்ள ரத்னவேல் கதாபாத்திரத்தை வைத்துசாதியத்தை பெருமைப்படுத்தும் பாடல்களை இணைத்து வீடியோக்களை ரீமேக்ஸ் செய்து வெளியிட்ட வருகிறார்கள். மாரிசெல்வராஜ் ஒருமுறை தேவர் மகன் படத்தை பற்றி பேசிய போது அதில் உள்ள விஷயங்கள் ஏற்படுத்திய தாக்கம் தான் மாமன்னன் எடுக்கக்காரணம் என்று கூறியிருந்தார்.
07 #மாமன்னன் pic.twitter.com/gGNo6rea3V
— 2.0 (@narachisulthan) July 29, 2023
இதனால் மாமன்னன் படத்தை வெளியிட தென்மாவட்டங்களில் எதிர்ப்பு எழுந்தது. அதேநேரம் கதைகளம் மேற்கு மாவட்டம் என்கிற போது பிரச்சனை அப்போது எழவில்லை. ஆனால் பகத் பாசில் கேரக்டர் மிக உக்கிரமாக இருக்கும். மாரிசெல்வராஜ் எடுத்த படங்களிலேயே மாமன்னன் படத்தில் வரும் வில்லன் ரோல் தான் மிகமிக மாஸாக இருக்கும். சாதி வெறியராக, ஆதிக்கமனப்பான்மை உடையவராக பகத் பாசில் ரத்னவேல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அந்த படத்தின் கதையில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் சாதிய பாடல்களை போட்டு, ரத்னவேல் கதாபாத்திரத்தை சனிக்கிழமை மாலை முதல் கொண்டாடத் தொடங்கினர். ஒரு சாதி இருசாதி என இல்லை, பெரும்பாலான சாதிகளுக்கு ரீமேக்ஸ் பாடல்களுடன் ரத்னவேல் கதாபாத்திரம் வெர்சன் நேற்று தீ போல் வெளியாகின. நேற்று முழுக்க முழுக்க ரத்னவேல் கதாபாத்திரம் தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் முதல் பேஸ்புக் ரீல்ஸ் வரை அத்தனையிலும் ஆக்கிரமித்திருந்தது. இணையத்தில் இன்றும் ரத்னவேல் கதாபாத்திரம் அதிக அளவு பேசப்பட்டு வருகிறது. இது எங்கு போய் முடியும் என்றே தெரியவில்லை.
திரைப்படங்களை சமுதாயத்தில் பலரும் தங்கள் வாழ்வியலுடன் இணைத்து பார்க்க தொடங்கினால், அதுவும் படத்தின் கதாபாத்திரங்களை தங்கள் சாதி அல்லது மதம் என்று தூக்கி பிடிக்க தொடங்கினால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. சில ரீமேக்ஸ் வீடியோக்களை இப்போது பார்ப்போம்.












Click it and Unblock the Notifications