90கிமீ வேகம்தான்.. சென்னை - கோவை வந்தே பாரத்தை "புல்லட் ரயில்" என்பதா? சீனா, ஜப்பான் வேகம் தெரியுமா?
சென்னை: சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இதை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புல்லட் ரயிலுடன் ஒப்பிட்டு பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முதல் நாள் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார் . கோவையில் இருந்து சென்னைக்கு வரும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

அதன்பின் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டுமானத்திற்கு பின் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையை 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும்.
அதேபோல் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்து உள்ளார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

வரவேற்பு: இந்த ரயிலுக்கு பெரிய அளவில் மக்கள் இடையே வரவேற்பு கிடைத்து உள்ளது. ஏற்கனவே சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும்.
இந்த ரயில் மக்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்று இருந்தாலும் கூட, இதை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இதை புல்லட் ரயிலுடன் ஒப்பிட்டு பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

வானதி சீனிவாசன் பேட்டி: இது தொடர்பாக வானதி சீனிவாசன் அளித்த பேட்டியில், நம்முடைய புல்லட் ரயில் கனவு நினைவாகி இருக்கிறது. 2016ஆம் ஆண்டு சீனா சென்றிருந்தபோது புல்லட் ரயிலில் சென்றேன். அதேபோல் நம்முடைய நாட்டிலும் புல்லட் ரயில் இயக்கப்படுமா என்று கனவு எனக்கு இருந்தது, தற்போது அந்த கனவு நினைவாகி இருக்கிறது. வந்தே பாரத் ரயில் நான் பாஜக எம்எல்ஏவாக இருக்கும் சமயத்தில் விடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டு இருந்தார்.
வந்தே பாரத் ரயிலை அவர் புல்லட் ரயிலுடன் ஒப்பிட்டு இருக்கிறார். ஆனால் புல்லட் ரயிலுடன் ஒப்பிடுகையில் வந்தே பாரத் ரயில்.. மிகவும் மெதுவான ரயில் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால்..
வந்தே பாரத் ரயில் 90 கிமீ வேகத்தில்தான் செல்கிறது. 495 km தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் கடக்கிறது. இது அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 130 கிமீ தூரத்தை கூட தொட்டாலும் அதே வேகத்தில் செல்வது இல்லை. சராசரி வேகம் என்னவோ 90 கிமீ / 1 மணி நேரம்தான்.
ஆனால் சீனாவின் ஷாங்காய் புல்லட் ரயிலை எடுத்துக்கொண்டால் அது 431 கிமீ வேகத்தை அதிகபட்சம் அடையும். சராசரியாக 245 கிமீ வேகத்தில் செல்லும்.
நாம் ஜப்பானுடன் இணைந்து புல்லட் ரயிலை அமைப்பதாக இருந்தது. இந்த ஜப்பான் புல்லட் ர்யில் அதிகபட்சமாக 500 கிமீ வேகத்தில் செல்லும். சராசரியாக 450 கிமீ வேகத்தில் செல்லும். சின்கன்ஸென் புல்லட் ரயில்கள் சராசரியாகவே 480 கிமீ வேகத்தை அடையும்.
ரஷ்யாவின் அதிவேக ரயில்கள் 220 கிமீ வேகத்தை சராசரியாக தொட கூடியவை.
ஏன் வேகம் இல்லை? : ஆனால் இவற்றுடன் ஒப்பிடுகையில் வந்தே பாரத் சென்னை - கோவை ரயில் பாகுபலி சிலைக்கு முன்னால் குட்டியாக இருக்கும் பல்வாள்தேவன் சிலைக்கு சமம்! வந்தே பாரத் ரயிலை புல்லட் ரயிலுடன் ஒப்பிடவே முடியாது. காரணம்.. புல்லட் ரயில் என்பது magnetic levitation முறையில் இயங்ககூடியது. அதாவது சில கிலோ மீட்டர் தண்டவாளத்தில் பயணம் செய்துவிட்டு அதன்பின் கந்த புலம் மூலம் உயர்த்தப்பட்டு தண்டவாளத்தில் இருந்து சில மீட்டர்கள் உயரத்தில் மிதப்பது போல வேகமாக பயணம் செய்யும். இதன் காரணமாகவே புல்லட் ரயில்கள் வேகமாக செல்கின்றன. ஆனால் வந்தே பாரத் ரயில் சாதாரண ரயில்கள் போல தண்டவாளத்தில் மட்டுமே பயணம் செய்யும்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் உண்மையில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது, ரயில் சேவையின் "லுக்" மாறி உள்ளது.. ஆனால் நாம் புல்லட் ரயில் அளவிற்கு சேவை வழங்க.. இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது.












Click it and Unblock the Notifications