இது தொடர்ந்தால்.. சென்னை அப்படியே பின்னுக்கு போயிடும்.. டெல்லி எடுத்த முடிவு.. உடனே சுதாரிக்கணும்
சென்னை: போக்குவரத்து துறை ரீதியாக சென்னை பின்னுக்கு செல்லும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. தமிழ்நாடு போக்குவரத்து துறை உடனே சுதாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சென்னை பொதுவாக போக்குவரத்தில் மற்ற நகரங்களை விட சிறப்பானது. அதாவது சென்னைக்கு பொதுப்போக்குவரத்து வசதி சிறப்பாக உள்ளது. சென்னையில் பேருந்துகள், மெட்ரோ, மின்சார ரயில் தொடங்கி ஆட்டோ, ஷேர் ஆட்டோ என்று பொதுவாக மக்கள் பயணிக்க நிறைய வசதிகள் உள்ளன.

சென்னையின் வளர்ச்சிக்கு சிறந்த பொதுப்போக்குவரத்தும் முக்கியம் ஆகும். ஆனால் கடந்த 10 வருடங்களாக சென்னைக்கு புதிதாக பெரிய அளவில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று டெல்லி அரசு 500 புதிய இவி பேருந்துகளை சாலையில் களமிறக்கி உள்ளது.
டெல்லி அரசு மூலம் இன்று முதல் புதிய 500 இவி பேருந்துகள் இயக்கப்படும். தமிழ்நாடு அரசு சென்னைக்கு புதிய பேருந்துகள் வாங்காத நிலையில் மற்ற மெட்ரோ நகரங்கள் புதிய பேருந்துகளை வாங்குவது.. சென்னைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மின்சார பேருந்துகள்: ஏற்கனவே தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சார பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார பேருந்துகள் பொது-தனியார்-கூட்டு மாதிரியின் கீழ் இயக்கப்படும், அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும், நடத்துநர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில அரசு ஒரு கிமீ அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் புள்ளி B வரை மின்சார பேருந்துகளை இயக்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. 2026-ம் ஆண்டு முதல் புதிய டீசல் பேருந்துகள் வாங்குவதை நிறுத்தும் யோசனையுடன் தற்போதுள்ள டீசல் பேருந்துகளை எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இருப்பினும், திட்டமிட்டபடி மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான திட்டங்கள் சரியாக நடப்பதை பொறுத்தே இது நடக்கும் என்று தமிழ்நாடு போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேருந்துகள் வாங்குவது இல்லை: ஏற்கனவே இருந்த வெள்ளை நிற ஏசி பேருந்து உட்பட ஏசி பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது சிறிய அளவிலான சிலர் நிற ஏசி பேருந்துகள் ,மட்டுமே உள்ளன. இது போக சிவப்பு நிறத்தில் அரசு சில பேருந்துகளை வாங்கியது. இதை தவிர சென்னைக்கு என்று பேருந்துகள் வாங்கப்படவே இல்லை.
மற்ற நகரங்கள்: மற்ற ஹைதராபாத், பெங்களூர் நகரங்களில் ஏசி பேருந்துகள் அதிக அளவில் உள்ளன. உதாரணமாக பெங்களூரில் நீல நிற ஏசி பேருந்துகள் அதிகம், உள்ளன. இது போக பர்பிள் நிற இவி பேருந்துகள் கடந்த 2 ஆண்டுகளில் அதிகம் வாங்கப்பட்டு உள்ளன.
ஹைதராபாத்தில் இவி பேருந்துகள் அடுத்தடுத்து வாங்கப்பட்டு வருகின்றன. இப்படி இவி பேருந்துகள், ஏசி பேருந்துகளில் பெங்களூர், ஹைதராபாத் கவனம் செலுத்தும் நிலையில் சென்னைக்கு புதிய பேருந்துகள் வாங்கப்படுவது இல்லை.
ஆனால் சென்னைக்கு புதிதாக பேருந்து வாங்க வேண்டிய டெண்டர் மட்டும் நாளுக்கு நாள் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. அதிலும் கடைசியாக விடப்பட்ட சில டெண்டர் 4-5 முறை கூட தள்ளிபோய் உள்ளது. பேருந்துகளை புதிதாக வாங்காமல் அரசு இதே நிலையில் தொடர்ந்தால் சென்னை விரைவில் அதன் பொழிவை இழக்கும்.
டெண்டர்: சென்னையில் பேருந்துகளை இயக்கி வரும் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு (எம்டிசி) 100 மின்சார பேருந்துகளை வாங்க விரைவில் டெண்டர் விட திட்டமிட்டுள்ளது. இதற்கான நிதியை KfW (ஜெர்மன் டெவலப்மென்ட் பேங்க்) மூலம் ஒவ்வொரு பேருந்துக்கும் சுமார் ₹2 கோடி வழங்கும். டெண்டரை வழங்க நிதி நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்று போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கு இணையாக, முதற்கட்டமாக, உலக வங்கியின் நிதியுதவியின் மூலம் சுமார் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு ஒரு மாதத்தில் டெண்டர் விடவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக மேலும் 500 மின்சார பேருந்துகளுக்கு நீட்டிக்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications