அதுக்குன்னு இது கொஞ்சம் ஓவர்.. சிஎஸ்கே மேட்சில் கேட்ட சத்தம்.. எல்லை மீறிட்டாங்களே.. ஷாக்கா இருக்கே!
சென்னை: சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
நேற்று சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வெறும் 139/8 ரன்கள் மட்டும் 20 ஓவரில் எடுத்தது.

மும்பை அணியில் ரோஹித் சர்மா மீண்டும் டக் அவுட் ஆனார். நேஹால் மட்டும் 64 ரன்கள் எடுக்க மும்பை அணி 140 ரன்களை சிஎஸ்கே அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்தது.
சிஎஸ்கே அணியில் பத்திரானா 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்து வேகம் காட்டியது. ருத்துராஜ் அதிரடியாக 30 ரன்கள் எடுத்தார். கான்வே 44 ரன்கள் எடுத்தார்.
ரஹானே 21, துபே 26 ரன்கள் எடுத்தனர். இதனால் சிஎஸ்கே அணி எளிதாக 17.4 ஓவர்களில் 140-4 ரன்கள் எடுத்து வென்றது.
டிஜே
நேற்று போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்யும் போது ரோஹித் சர்மா பீல்டிங் மாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது மைதானத்தில் இருந்த டிஜே அவரை கிண்டல் செய்யும் விதமாக ஒரு சூறாவளி கிளம்பியதே பாடலை ஓடவிட்டார்.
தமிழ் படத்தில் சிவா நடித்த அந்த காமெடி பாடலை ரோஹித் சர்மாவிற்காக அவர் ஒலிபரப்பினார். பொதுவாக தோனி களத்திற்கு பேட்டிங் செய்ய வரும் போது டிஜே பாடல் போடுவார். விக்ரம் படத்தின் கோஸ்ட் பாடல், பாட்ஸா பாடல்களை போட்ட டிஜே நேற்று தோனி வரும் போது டூபான் பாடலை கேஜிஎப் படத்தில் இருந்து போட்டார்.

ஆனால் அதே டிஜே ரோஹித் சர்மாவை கிண்டல் செய்யும் விதமாக ஒரு சூறாவளி கிளம்பியதே பாடலை ஓடவிட்டார். இதை கேட்டதும் ரசிகர்கள் பலரும் ஓ என்று கத்தினர். சென்னை 28 - பார்ட் 2 படத்தில் சிவா அவுட் ஆவது போலவே நேற்று ரோஹித் சர்மாவும் வித்தியாசமாக ஷாட் அடிக்க போய் அவுட் ஆனார். இதனால் இரண்டு பேரையும் தொடர்பு படுத்தி விவாதங்கள் நடந்தன.
பொதுவாக ரோஹித் சர்மாவை நடிகர் சிவாவுடன் ஒப்பிட்டு செய்வது வழக்கம். இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பதால் அப்படி கிண்டல் செய்யப்படுவது வழக்கம். அதில் தவறு இல்லை.
சிஎஸ்கே ரசிகர்கள் வெளியே அவரை கிண்டல் செய்யலாம். சிஎஸ்கே அணி கூட சோசியல் மீடியாவில் அவரை கிண்டல் செய்யலாம். ஆனால் களத்தில் இருக்கும் போது ஒரு வீரரை கிண்டல் செய்து எதிரணி மைதானத்தின் டி ஜே பாடல் போடுவது என்று மிக மிக தவறான விஷயம்.
அதிலும் ஆட்டத்தின் நடுவில் இப்படி எல்லாம் பாடல் போடுவது தவறு. இதுவே தோனி.. மும்பை மைதானத்திற்கு சென்ற போது.. அங்கே டிஜே அவரை கிண்டல் செய்து பாடல் போட்டால் எப்படி இருக்கும்? அது எவ்வளவு தவறான விஷயமாக பார்க்கப்படும்.
அப்படி இருக்கும் போது சிஎஸ்கே அணி ஆடும் சேப்பாக்கம் மைதானத்தில் ரோஹித் சர்மாவை கிண்டல் செய்யும் விதமாக ஒளிபரப்பப்பட்ட பாடல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications