Children's Day: நாளைதானே குழந்தைகள் தினம்! இன்றே முதல்வர் விஜய் கேக் வழங்கியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகள் தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் விஜய் இன்றைய தினமே அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏன் கேக்குகளை வழங்கினார் தெரியுமா?

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் நவம்பர் 14 ஆம் தேதி ஆகும். அவர் குழந்தைகள் மீது அவர் அளவற்ற பற்றுக் கொண்டிருந்தார். இதனால் இந்தியாவில் அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

CM Vijay

நேருவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அது போல் ரோஜா மலர்களும் அவருக்கு அலாதி பிரியம். குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்கால தூண்களாகவே நேரு கருதியிருந்தார். குழந்தைகளும் நேருவை "சாச்சா நேரு", அதாவது நேரு மாமா என அழைத்தனர்.

1964 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஐக்கிய நாடுகள் சபை அறவித்தபடி நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் அதே ஆண்டில் நேரு மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவிதமாக அவரது பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவது என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது முதல் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

"இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியா" என்பது அவருடைய பொன்மொழியாகும். அந்த வகையில் குழந்தைகள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழக அரசு சார்பில் இன்றே பள்ளி குழந்தைகளுடன் முதல்முறையாக கொண்டாட்டம் நடந்தது.

இதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கேக் கொள்முதல் செய்ய டெண்டரும் விடப்பட்டது, கேக்குடன், வாழ்த்து அட்டையும் தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த வாழ்த்து அட்டையில் "All is Well, Confident- ah இருங்க" என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் நாளைக்கு பதிலாக இன்றைய தினமே முதல்வர் விஜய் குழந்தைகளுக்கு கேக் வழங்கினார். இது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாளைதான் குழந்தைகள் தினம் என்றாலும் இன்றே ஏன் கொண்டாடப்பட்டது என்றால் நாளை இரண்டாவது சனிக்கிழமையையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை! அதனால் இன்றே கேக் வழங்கும் நிகழ்வு நடந்தது.

இதுவரை குழந்தைகள் தினம் இப்படி கேக் வழங்கி கொண்டாடப்படவில்லை. முதல்முறையாக கொளத்தூரில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. மொத்தம் 61,84,566 கேக் துண்டுகள் வழங்கப்பட்டன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக்கும், வாழ்த்து அட்டையும் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.9.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+