எதோ பெருசா நடக்க போகுது.. தங்கத்தை வாங்கி குவிக்கும் சீனா.. பக்கா பிளானோடு நகரும் "டிராகன்"!
சென்னை: உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீனா தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.
சர்வதேச அளவில் இந்த ஆண்டு தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு அதாவது 28 கிராமிற்கு 2,400 டாலருக்கும் அதிகமாக உயர்ந்து உலகச் சந்தைகளை உலுக்கி உள்ளது. இதையடுத்து தங்கத்தை சீனா வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. இந்த தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான சீனா அதை அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றும் ஆகும்.

தங்கம் விலை உயர்வு: 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். CNBC Awaaz நிகழ்ச்சி உரையாடலில் பேசிய Vighnaharta Gold இன் தலைவர் மகேந்திர லூனியா, 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும் என்று கணித்துள்ளார்.
சர்வதேச அளவில் போர்கள் நடக்கின்றன. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இனி நடக்க போகும் தாக்குதல்கள் உலகப்போரை உருவாக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
வடகொரியா - தென் கொரியா போர் , உக்ரைன் ரஷ்யா போர், இஸ்ரேல் - ஈரான் போர் போன்ற போர்கள் தற்போது நடக்கின்றன. பல நாடுகளில் நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றமும் கூட தங்க விலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த போர்கள் காரணமாக உலக நாடுகள் பலதும் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில்தான் மத்திய வங்கியின் அதிக அளவிலான தங்க கொள்முதல், பணவீக்க அழுத்தங்கள், அதிகரித்த சில்லறை தேவை, பரிவர்த்தனை-வர்த்தக நிதிகள் மூலம் அதிகரித்த வட்டி, 2016 முதல் தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம், மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகிய அனைத்தும் தங்கத்தின் மதிப்பு உயர்வுக்கு பங்களித்துள்ளன.
இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹1.68 லட்சத்தை எட்டும். அடுத்த 4-5 வருடங்கள் தங்கத்தின் விலை வேகமாக உயரும். தங்கத்தின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு உள்ளது. உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன.
இப்படி உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, தங்கத்தின் பற்றாக்குறை ஆகியவை காரணமாக 2030ல் தங்கத்தின் விலை யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாங்கி குவிக்கும் சீனா: இப்படிப்பட்ட நிலையில்தான் தங்கத்தை சீனா வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. சீனாவும் இந்தியாவும் பொதுவாக உலகின் மிகப்பெரிய தங்கம் வாங்கும் நாடுகள் ஆகும். கடந்த ஆண்டு நகைகள், தங்க பார்கள் மற்றும் தங்க நாணயங்களின் சீன நுகர்வு அதிகரித்ததால் தங்கத்தின் விலை உயர்ந்தது.
இந்த ஆண்டும் தங்க நுகர்வு அதிகரித்துள்ளது. சீனாவின் தங்க நகைகளின் தேவை 10% உயர்ந்துள்ளது, இந்தியாவின் தங்க நகை தேவை 6% குறைந்துள்ளது. சீன பார் மற்றும் நாணய முதலீடுகள், இதற்கிடையில், 28% அதிகரித்து உள்ளன. உலக அளவில் நடக்கும் மோதல்களால் மூன்றாம் உலகப்போர் வர வாய்ப்புள்ளதால் சீனா இந்த முதலீட்டை மேற்கொள்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தங்கத்தின் விலை: சமீப காலமாக தங்கத்தின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருகிறது. 2024 முதல் காலாண்டில் மட்டும் தங்கம் 13% உயர்ந்தது. நேற்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 68,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 75110 ரூபாயாக உள்ளது.
ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 55,080 ரூபாயாக உள்ளது. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் குறைந்தாலும் தொடர்ந்து மற்ற நாட்களில் மிகப்பெரிய அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் ஒரு சவரன் விலை 60 ஆயிரத்தை விரைவில் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications