தயவு செய்து கவனியுங்கள்.. இன்சூரன்ஸ் எடுக்கும்போது CSR பார்க்குறது ரொம்ப முக்கியம்!
சென்னை: லைஃப் காப்பீடு பாலிசி எடுக்கும்போது, க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோவை (Claim Settlement Ratio - கோரிக்கை தீர்வு விகிதம்) கட்டாயம் பார்க்கணும்னு நிபுணர்கள் சொல்றாங்க. இது எதுக்குன்னா, நீங்க கஷ்டப்பட்டு பணம் கட்டி பாலிசி எடுத்த பிறகு, உங்க குடும்பத்துக்கு அந்த பணம் கிடைக்குமா, கிடைக்காதான்னு தெரிஞ்சுக்க உதவும்.
க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ என்றால் என்ன?
ஒரு வருஷத்துல ஒரு காப்பீட்டு கம்பெனிக்கு எவ்வளோ க்ளைம் வருதோ, அதுல எவ்ளோ க்ளைம்க்கு அவங்க பணம் கொடுக்குறாங்கன்னு சொல்றதுதான் இந்த ரேஷியோ. ரேஷியோ அதிகமா இருந்தா, அந்த கம்பெனி நல்லா க்ளைம் செட்டில் பண்ணுவாங்கன்னு அர்த்தம். கம்மியா இருந்தா கொஞ்சம் யோசிக்கணும்!

இது ஏன் முக்கியம்?
நம்மளோட குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பு வேணும்னுதான் நம்ம இன்சூரன்ஸ் எடுக்குறோம். நம்மளுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, அந்த பணம் நம்ம குடும்பத்துக்கு கரெக்டா கிடைக்கணும்ல? அதுக்கு இந்த ரேஷியோ முக்கியம். நல்ல ரேஷியோ இருந்தா, கம்பெனி நம்பகமான கம்பெனின்னு அர்த்தம்.
நிறைய வருஷம் பணம் கட்டிட்டு, க்ளைம் பண்ணும்போது கம்பெனி பணம் தரலைன்னா என்ன பண்றது? ரேஷியோவை பார்த்தா, கம்பெனி எப்படி க்ளைம் செட்டில் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.
எப்படி கணக்கு போடுறது?
க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ = (ஒரு வருஷத்துல செட்டில் பண்ண க்ளைம்ஸ் எண்ணிக்கை / ஒரு வருஷத்துல வந்த மொத்த க்ளைம்ஸ் எண்ணிக்கை) x 100. உதாரணத்துக்கு, ஒரு கம்பெனி 10,000 க்ளைம்ல 8,000 க்ளைம் செட்டில் பண்ணிருந்தா, ரேஷியோ 80%.
எங்கு பார்ப்பது?
இந்திய இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி & டெவலப்மென்ட் அத்தாரிட்டியின் (IRDA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களின் க்ளைம் செட்டில்மென்ட் விகிதத்தை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும், இங்கு அந்த தகவல் புதுப்பிக்கப்படும்.
கவனிக்க வேண்டியது
85% மேல ரேஷியோ இருந்தா, அந்த கம்பெனி நல்ல கம்பெனின்னு சொல்லலாம். 90% மேல இருந்தா ரொம்ப நல்லது. கம்பெனி வருஷா வருஷம் நல்ல ரேஷியோ மெயின்டெய்ன் பண்ணா, அதுவும் நல்லது. க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ காப்பீடு பாலிசி எடுக்கும்போது ரொம்ப முக்கியமான விஷயம். ஆனா, இதோட மட்டும் நிக்காம, பாலிசியோட கவரேஜ், மற்ற அம்சங்களையும் பாருங்க. புரிஞ்சுக்கிட்டு பாலிசி எடுத்தா, உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்லது!
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications