ஓஹோ.. ஸ்டாலின் இதற்காகதான் டெல்லி சென்றாரா.. குடியரசு தலைவருடன் நேரில் சந்திப்பு.. பரபர தலைநகரம்
இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார் ஸ்டாலின்
சென்னை: டெல்லி சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின், இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கடந்த ஜுன் 17-ம் தேதி டெல்லி சென்றார் ஸ்டாலின்.. அப்போது பிரதமர் மோடியை சந்தித்து பேசியதுடன், தமிழகம் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார்.
இப்போது 2வது முறையாக டெல்லி சென்றிருக்கிறார் ஸ்டாலின்.. நேற்று சாயங்காலம் 5 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார்...!

முதல்வர்
முதல்வருடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன்உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். நேற்றிரவு முதல்வர் டெல்லியில் தங்கினார்... இன்று பகல் 12.15 மணி அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஸ்டாலின் சந்தித்து பேசினார்.. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவரை ஸ்டாலின் இன்று சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை
குடியரசு தலைவரிடம் தமிழக நலன் சார்ந்த நிறைய விஷயங்கள் குறித்த கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.. குறிப்பாக, 7 பேர் விடுதலை விவகாரம், தமிழகத்திற்கு அதிக அளவு தடுப்பூசிகளை ஒதுக்கவேண்டும், வரவேண்டிய நிலுவை தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் இப்படி பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை குடியரசுத் தலைவரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றன.

விழா
மேலும், பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சட்டமன்றத்தில் கலைஞரின் படத்தை திறக்கவும் முடிவு செய்யப்பட்டிருப்பதால், அதில் பங்கேற்று கருணாநிதியின் படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை முதல்வர் ஸ்டாலின் அழைத்துள்ளார். அத்துடன், கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின்.

நீட் தேர்வு
எனினும், ஸ்டாலினின் குடியரசு தலைவர் சந்திக்க போவதற்கு மிக முக்கியமாக காரணம், நீட் தேர்வு விவகாரம்தான் என்றார்கள்.. நீட் தமிழகத்தில் நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது தொற்று காரணமாக நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த ஒரு வருஷத்துக்கும் மேலாக மேலாக நடத்த முடியாத நிலைமை உள்ளது.. அதனால், ஏழை, நடுத்தர மாணவர்கள் நீட் தேர்வு எழுதினாலும் அவர்களால் அதிக மார்க் எடுத்து மெடிக்கல் காலேஜ்களில் சேர முடியாது..

வலியுறுத்தல்
அதனால்தான், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் குடியரசு தலைவரிடம் முதல்வர் அழுத்தமாக வலியுறுத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முதல்வர் அழுத்தம் தந்துள்ளார். அதற்கு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளதாக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications