பாதம் தாங்கி பழனிசாமி.. திடீரென எடப்பாடியை ஸ்டாலின் தாறுமாறாக அட்டாக் செய்வது ஏன்? இதுதான் காரணம்?
சென்னை: எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். திமுக தொடங்கி வைத்த திட்டங்கள் எல்லாமே எதோ பாஜக தொடங்கி வைத்த திட்டங்கள் என்பது போல அவர் பேசுகிறார், இதனால் ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுக்கும்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. நீண்ட காலமாக எடப்பாடியை விமர்சனம் செய்யாமல் இருந்த ஸ்டாலின் திமுக முகவர்கள் கூட்டத்தில் எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதில், திமுக குடும்பக் கட்சிதான் - கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கின்ற கட்சிதான் திமுக. வாய்ச்சவடால் விடக்கூடாது. பாதம் தாங்கி பழனிசாமி இன்னும் தரையிலேயே ஊர்ந்துட்டு இருக்காரா? கொஞ்ச தலையை தூக்கித்தான் பாருங்களேன். நாங்கள் செய்யும் நல்லது எரியும்.
தரையில் ஊர்ந்து கொண்டே இருந்தால் நாங்கள் சொல்வது, செய்வது உங்களுக்கு எப்படி தெரியும். எடப்பாடி பழனிசாமி பேசியது பேச்சல்ல; வயிற்று எரிச்சல். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து பச்சைப்பொய்யை பேசுகிறார் பழனிசாமி, என்று ஸ்டாலின் காட்டமாக பேசி உள்ளார். அவரின் பேச்சுக்கு என்ன காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பேட்டி: அதில், தமிழ்நாடு பாஜகவிற்கு ஸ்டாலின் பதில் சொல்லவே இல்லை. பதில் சொல்ல மாட்டார். அண்ணாமலைக்கு அவர் பதில் சொல்லவே மாட்டார். இதுவரை சொல்லவும் இல்லை. இன்னொரு பக்கம் எடப்பாடியை அட்டாக் செய்வது அவர் வழக்கம். அதன்படியே நேற்றும் அட்டாக் செய்து பேசினார். அது எதிர்பார்த்ததுதான். இஸ்லாமியர்கள் தன் பக்கம் வந்துவிட்டது போல எடப்பாடி பேசினார்.
( ஸ்டாலின் மேசையில் ரிப்போர்ட்! உலக தரத்தில் அப்படியே மாறும் சாலைகள்.. கிராம, நகர சாலைகளை மாற்ற முடிவு )
அதனால் எடப்பாடிக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். திமுக தொடங்கி வைத்த திட்டங்கள் எல்லாமே எதோ பாஜக தொடங்கி வைத்த திட்டங்கள் என்பது போல அவர் பேசுகிறார். அதனால்தான் ஸ்டாலின் பதிலடி கொடுக்கிறார். இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் திமுகவிற்கு எதிரி என்பது போல் எடப்பாடி பேசுகிறார். அதையும் ஏற்க முடியாது. ஏனென்றால் இஸ்லாமியர்கள் திமுக மீது அதிருப்தியில் இருக்க எந்த காரணமும் இல்லை.
ஸ்டாலின் பேசியது ஏன்?: ஸ்டாலின் பேச வேண்டிய விஷயங்களைத்தான் பேசி இருக்கிறார். எடப்பாடிக்கு அவர் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதை ஸ்டாலின் செய்து இருக்கிறார். சிறுபாண்மையினரை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்துள்ளார். பாஜக இப்போதும் கூட்டணிக்கு கதவை திறந்து வைத்துள்ளது. கூட்டணிக்கான கதவு இப்போதும் திறந்தே உள்ளது. அதனால் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு உண்மையா என்பது சந்தேகம்தான். அதோடு இல்லாமல் இப்போது கூட்டணி இல்லை. எல்லோரிடமும் போய் சொல்லுங்கள். மக்களிடம் போய் சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார்.

ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு எடப்பாடிக்கு சாதகமாக இருக்கும். எந்த அளவிற்கு உதவியாக மாறும். மக்கள் அல்லது சிறுபாண்மையினர் அதை எந்த அளவிற்கு நம்புவார்கள் என்று சந்தேகம் உள்ளது. சிறுபான்மையினரை பற்றி எடப்பாடி மீண்டும் மீண்டும் பேசுவதால் எடப்பாடிக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது. களம் இன்னும் திமுகவிற்கு சாதகமாகவே உள்ளது.
கோபம் இல்லை: மக்கள் திமுக மீது கோபத்தில் இல்லை. மக்களுக்கு முடிந்த அளவு நல்ல விஷயங்களை செய்துள்ளனர். உரிமைத்தொகை கூட 1 கோடி பேருக்கு கொடுத்துள்ளனர். காலை உணவு திட்டத்தை கூட பல லட்சம் மாணவர்களுக்கு செய்துள்ளனர். எனவே இவர்கள் எல்லாம் அரசு மீது அதிருப்தியில் இல்லை. ஒரு சில விஷயங்களை தவிர மற்றவர்கள் திமுக மீது எதிர்ப்பில் இல்லை. பரந்த அளவில் திமுகவிற்கு அவர்கள் தீவிர ஆதரவை கொடுக்கின்றனர்.
அப்படி இருக்க எடப்பாடிக்கு அஞ்சி ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. இருந்தாலும் எடப்பாடி பேச்சை முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஸ்டாலின் பேசி உள்ளார். அவரும் கூட பூத் லெவலில் இருக்கும் நிர்வாகிகளை குறி வைத்தே ஸ்டாலின் பேசி உள்ளார் என்று நான் கருதுகிறேன் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications