Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனக்கு தெரியாதுன்னு நினைக்காதீங்க! பாஜக "தலைக்கு" வேலை பார்த்த கருப்பு ஆடுகள்! ரெய்டு விட்ட ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் பணிகளுக்கு இடையில் திமுக நிர்வாகிகள் சிலரிடம் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு காட்டி உள்ளாராம்.

தினமும் பிரச்சாரத்திற்கு இடையே நேரம் கிடைக்கும் போதே மா.செ.க்களுடன் காணொலி காட்சி வழியாக தேர்தல் தொடர்பாக விவாதிக்கவிருக்கிறார். அப்போது, வேட்பாளர்கள் பிரச்சாரம் குறித்தும் தேர்தல் களநிலவரம் குறித்தும் மா.செ.க்களின் கருத்துக்களை கேட்டு வருகிறார் ஸ்டாலின்.

Why CM Stalin is upset with few leaders in Thirunelveli ahead of Lok Sabha elections 2024

மேலும், நம் வேட்பாளர்களை மட்டுமல்லாமல் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்றும், ரிசல்ட் நெகட்டிவ்வாக வந்தால் ஏற்கனவே எச்சரித்தபடி பதவியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்றும் மீண்டும் மா.செ க்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார் தலைவர் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலயத்தினர்

ஸ்டாலினுக்கு செல்லும் தகவல்: தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒரு நாளைக்கு 2 தொகுதிகளில் வலம் வருகிறார். பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளையும் அரவணைத்து வேட்பாளர் அறிமுக கூட்டங்களை திமுக நடத்தி வருவதையும் உன்னிப்பாக கவனிக்கும் ஸ்டாலின், இத்தகைய கூட்டங்களில் சர்ச்சைகள், வருத்தங்கள், ஆதங்கங்கள், உள்ளடி வேலைகள் என எதுவாக இருப்பினும் ஸ்டாலினுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.

தனது கவனத்துக்கு வந்ததுமே, அன்றைய தினம் இரவு சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பேசுகிறார். எச்சரிக்கை செய்ய வேண்டியவர்களுக்கு எச்சரிக்கையும், கண்டிக்க வேண்டியவர்களுக்கு கண்டிப்பும், கனிவாக பேசப்பட வேண்டியவர்களிடம் கனிவாகவும் என பல்வேறு நவரச முகங்களைக் காட்டுகிறார் ஸ்டாலின். .

புகார்: லோக்சபா தேர்தல் பணிகளுக்கு இடையில் திமுக நிர்வாகிகள் சிலரிடம் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பு காட்டி உள்ளாராம் திருநெல்வேலி சிட்டிங் எம்பி ஞான திரவியம். அவரை பற்றி எடுக்கப்பட்ட சர்வேயில் வெற்றி வாய்ப்பு இல்லை.. காங்கிரசுக்கு வாய்ப்பு உள்ளதாக ரிப்போர்ட் சென்றுள்ளது.

இதையடுத்து அந்த தொகுதியை காங்கிரசுக்கு வழங்கியது திமுக. ஆனால் காங்கிரஸ் அங்கு வேட்பாளரை அறிவிக்காமல் முடிந்த அளவு காலம் தாழ்த்தியது. கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன் அங்கே ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுவார் என்றும் அறிவித்தது.

ஆனால் அவர் நெல்லையே கிடையாது. அவர் கன்னியகுமாரிகாரர். அவரை போய் இங்கே களமிறக்கியது ஏன் என்று திமுகவினர் குமுறி வருகின்றனர். இதனால் அப்செட் ஆன சில திமுக நிர்வாகிகள்.. பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ரகசியமாக களப்பணிகளை செய்து வருகின்றனராம்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு எந்த பணிகளையும் செய்யாமல் இவர்கள் தனியாக நயினாருக்கு சில வேலைகளை செய்து வருகின்றனராம்.

இதை கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின்.. இங்கே சிலர் நயினார் நாகேந்திரனுக்கு வேலை செய்வதை கேள்வி பட்டேன். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். சிலர் கூட்டணி கட்சிகளுக்கு வேலை செய்யாமல் இருக்கிறார்கள். இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

எனக்கு தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது. 40க்கு 40 எடுப்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். அதற்கான பணிகளை தீவிரமாக செய்யுங்கள். பணி செய்ய முடியாது.. தலைமையின் முடிவை ஏற்க முடியாது என்றால் கட்சியை விட்டே சென்றுவிடுங்கள். இங்கே இருந்துகொண்டு எதிர் தரப்பிற்கு வேலை செய்யும் வேலை வேண்டாம் என்று கடுமையாக கண்டித்து இருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+