"கிளைமேக்ஸ்" நாளை.. கருணாநிதிக்கு அன்று வந்த அதே சிக்கல்.. திணறும் வைகோ.. மதிமுகவில் வீசும் புயல்
வைகோ நாளைய தினம் பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்க உள்ளார்
சென்னை: மதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்தே வரும் நிலையில், நாளை கூடுகிறது அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்..!
துரை வைகோவுக்கு மிக முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
காரணம், அன்று திமுகவில் கருணாநிதியிடம் வாரிசு அரசியலை எதிர்த்துதான், கட்சியைவிட்டு வெளியே வந்தார் வைகோ.. மதிமுகவை தொடங்கியதும் அதற்குபிறகுதான்..!

வாரிசு அரசியல்
அப்படி இருக்கும்போது தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண்டுவருவதா? என்ற விமர்சனங்கள் கட்சிக்குள் தலைதூக்கி வருகின்றன.. சில மாதங்களுக்கு முன்பு, துரை வையாபுரியை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் திட்டவட்டமாக சொல்லி வந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு, வைகோ மகன், துரை வையாபுரி தலைமை நிலைய செயலாளராகவும் நியமிக்கப்பட்டது கட்சிக்குள் ஒரு பிரிவினரிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

4 பேர் எதிர்ப்பு
துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருகட்டத்தில் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியில் இருந்தே விலகுவதாக அறிவித்தது பரபரப்பை அதிகமாகிவிட்டது.. கடந்த சில தினங்களாக, மதிமுக மாவட்ட செயலாளர்கள் 4 பேர் பகிரங்கமாகவே போர்க்கொடி தூக்கிவிட்டனர்.. சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் சிவந்தியப்பன் விருதுநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

வைகோ
அப்போது "மதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்... இந்த கட்சி திமுக வில் இருந்து பிரியும்போது, திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக சொல்லித்தான் பிரிந்தது. இப்போதும் அதே நிலையில் தன்னுடைய மகனை துணைப் பொதுச் செயலாளராக கட்சியின் கொள்கைக்கு விரோதமாக வைகோ முடிவெடுத்து செயல்படுகிறார்... எனவே அவரது இந்தக் கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்... அதனால், இனி மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்... மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றனர்.

பொதுக்குழு
இப்படிப்பட்ட சூழலில்தான் நாளை மதிமுக பொதுக்குழு கூடுகிறது.. இந்த பொதுக்குழுவில்தான், தலைமை நிலைய செயலராக உள்ள தன் மகன் துரைக்கு செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலர் பதவி வழங்க வைகோ யோசித்து வருவதாகவும், அதற்கேற்ற வகையில் கட்சி சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் கசிந்தன..

15 மா.செக்கள்
இப்போது 15 மா.செ.க்கள் மட்டுமல்லாமல், மதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரிடமும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், இதை வைகோ எப்படி சமாளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், அதிருப்திக்குள்ளாகி இருக்கும் மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது... எனவேதான், அதிருப்தியாளர்களையும் கூட்டத்தில் பங்கேற்க வைத்து அவர்களை சரிகட்ட வைகோ முயற்சித்து வருகிறாராம்.. சமாதானப்படுத்தும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளாராம்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications