தமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்
சென்னை: தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை எத்தனை பேர் பாதிப்புடன் உள்ளார்கள். எத்தனை பேர் குணம் அடைந்தார்கள் என்பதை இப்போது பார்க்கும் போது 11 மாவட்டங்களில் 50க்கும் அதிகமானோருக்கு தினமும் தொற்று அதிகரித்து வருகிறது.
இந்த மாவட்டங்களில் 50க்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அப்படி மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களை எப்படி பாதிப்பு உள்ளது என்பதை பார்ப்போம்.

பாதிப்பு மிக அதிகம்
செங்கல்பட்டில் மொத்தம் 777 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 253 பேர் குணம் அடைந்துள்ளனர். 518 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏழுபேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 10570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4844 பேர் குணம் அடைந்துள்ளனர். 5653 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் 136 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் 61 பேர் குணம் அடைந்துவிட்டனர். 75 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காஞ்சிபுரத்தில் 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 152 பேர் குணம் அடைந்துள்ளனர். 132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் பலியாகி உள்ளார். மதுரையில் 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளள நிலையில் 115 பேர் குணம் அடைந்துவிட்டனர். 114 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவண்ணாமலை
தேனியில் கொரோனாவால் 106 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54 பேர் குணம் அடைந்துவிட்டனர். 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூரில் 731 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 270 பேர் குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். 452 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 9 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் 188 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 81 பேர் குணம் அடைந்துள்ளனர். 107 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம்
தூத்துக்குடியில் கொரோனாவால் 160 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39 பேர் குணம் அடைந்துவிட்டனர்.119 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலியில் கொரோனாவால் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 99 பேர் குணம் அடைந்துவிட்டனர். 182 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.ஒருவர் பலியாகி உள்ளார். விருதுநகரில் கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 44 பேர் குணம் அடைந்துவிட்டனர். 54 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விழுப்புரத்திலும் குறைந்தது
இந்த 11 மாவட்டங்களை தவிர சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள போதிலும் பாதிப்புடன் சிகிசை பெறுபவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாக உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவது வேகமாக குறைந்து வருகிறது. அந்த வரிசையில் பார்த்தால் அரியலூர், விழுப்புரம்,உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ள. அரியலூரில் 356 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 348 பேர் குணம் அடைந்துவிட்டனர். 8 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் 326 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 300 பேர் குணம் அடைந்துவிட்டனர். 24 பேர் மட்டுமே பாதிப்புடன் உள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications