திராவிட கட்சிகளின் கோட்டை.. கால்பதிக்கும் சிபிஎம்! திண்டுக்கல்லை தேர்வு செய்தது ஏன்? ஸ்டாலின் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில் திண்டுக்கல் தொகுதியை திமுக சிபிஎம்க்கு கொடுத்தது ஏன் என்று இங்கே பார்க்கலாம்.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

Why CPM decide to run from the Dindigul seat What is the reason behind DMK decision

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)

கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.

அதேபோல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில் திண்டுக்கல் தொகுதியை திமுக சிபிஎம்க்கு கொடுத்தது ஏன் என்று இங்கே பார்க்கலாம்.

மதுரையில் ஏற்கனவே சிபிஎம்தான் உள்ளது. கோவையில் சிபிஎம் இருந்த நிலையில் அவர்களுக்கு திண்டுக்கல் தரப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் வரலாறு: திண்டுக்கல் லோக்சபா தொகுதி பாரம்பரியாக திராவிட கட்சிகளின் தொகுதி ஆகும். இங்கே திமுக, அதிமுக வென்றுள்ளது. காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கூட வென்றுள்ளது. ஆனால் சிபிஎம் வென்றது இல்லை.

ஆனால் இங்கே கம்யூனிச சித்தாந்த கொள்கை கொண்டவர்கள் அதிகம் உள்ளனர். தற்போது அங்கே எம்பியாக திமுக வேலுசாமி உள்ளார். இவர் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதற்கு முன் அதிமுகவின் உதயகுமார் அங்கே எம்பியாக இருந்தார்.

அதற்கு முன் காங்கிரஸ், அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இங்கே எம்பி பதவிகளை வகித்து வந்தன. இந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது.

இதில் திண்டுக்கல் தொகுதியை திமுக சிபிஎம்க்கு கொடுத்தது உளவுத்துறை ரிப்போர்ட் அடிப்படையில் இருக்கலாம் என்கிறார்கள். சிபிஎம் இங்கே போட்டியிட விரும்பியதாலும், அங்கே பெண் நிர்வாகி ஒருவர் களமிறங்க உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது கூட்டணி கட்சியான சிபிஎம் இருக்கும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக போட்டியிட உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+