எல்லாரும் எதிர்பார்க்குறது இதைத்தான்.. தோனி மட்டும் அப்படி பண்ணினா போதும்.. தகித்த பேன்ஸ்! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை டெல்லி அணிக்கு எதிராக ஆட உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நடக்க உள்ளது.

சிஎஸ்கே அணிக்கு ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த சீசனில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அதன்பின் அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தது.

இடையில் சில போட்டிகளில் தேவையின்றி ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி தற்போது சிஎஸ்கே அணிக்கே எதிராக திரும்பி உள்ளது.

Why CSK Dhoni should change his batting position in the next match of the IPL 2023 season?

கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. பேட்டிங் பிட்சை கணிக்க தவறியது, டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டாவது இன்னிங்சில் பனி காரணமாக பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது ஆகியவை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சிஎஸ்கேவின் ப்ளே ஆப் வாய்ப்பு வெகுவாக குறைந்து உள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

Why CSK Dhoni should change his batting position in the next match of the IPL 2023 season?

தோனி கடைசி சீசன்?

சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும்.. எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அவரை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர்.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்கும் என்பதால் அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர தொடங்கி உள்ளனர். இதனால் சிஎஸ்கே ஆடும் போட்டிகளில் எல்லாம் மைதானமே மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

தோனியின் கடைசி சீசனாக இது இருக்குமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இதனால்தான் ஜடேஜா பேட்டிங் செய்யும் போது அவர் அவுட் ஆனால் கூட அதற்காக வருத்தப்படாமல்.. ஓ என்று கத்தி ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

Why CSK Dhoni should change his batting position in the next match of the IPL 2023 season?

மாற்றம்: இந்த நிலையில்தான் இந்த சீசனில் தோனி முக்கியமான் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

அதன்படி தோனி பேட்டிங் ஆர்டரில் கடைசியில் வருகிறார். பினிஷராக இருந்தவர் மைக்ரோ பினிஷர் ஆகி உள்ளார். 2- 5 பந்துகள்தான் பிடிக்கிறார்.

ஆனால் அதிலும் கூட சிக்ஸ் அடிக்கிறார். அதே சமயம் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் மொயின், ஜடேஜா சிக்ஸ் அடிக்க முடியாமல் திணறுகிறார்கள். இதனால் தோனி பேட்டிங் ஆர்டரில் முன்பே இறங்க வேண்டும் .

அடுத்த மேட்சிலும், ப்ளே ஆப் செல்லும் பட்சத்தில் அந்த மேட்சிலும் தோனி சிறப்பாக ஆட வேண்டும். அவரின் கடைசி சீசன் என்பதால் களத்தில் கூடுதல் நேரம் இருக்க வேண்டும்.

அதற்கு தோனி பேட்டிங் ஆர்டரில் சீக்கிரமே இறங்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்களும் அவரின் அதிரடியை பார்க்க முடியும். அதோடு மிடில் ஆர்டர் சொதப்புவதை தடுக்க முடியும்.

மேலும் ஜடேஜாவும் விக்கெட்டை இழந்த பின் ரசிகர்கள் கத்துவதை கேட்டுகொண்டு சோகமாக செல்ல வேண்டியது இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+