தோனி அவுட்டானதும்.. வந்ததே கோபம்.. B******* என்று கொச்சையாக கத்திய கோலி.. எல்லாம் பொய்யா கோபால்ல்?
சென்னை: நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக பெங்களூர் அணி ஆடிய போட்டியில் முன்னாள் கேப்டன் கோலி நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
பொதுவாகவே கோலி.. 4 விசில் வந்த குக்கர் மேலே துள்ளி குதிக்கும் நீர் திவலைகள் போல சூடாக இருக்க கூடியவர். அதிலும் கோலி கேப்டனாக இருந்த சமயங்களில் 9வது பேட்டிங் பிடிக்க வரும் பவுலரின் விக்கெட் விழுந்தாலும் கூட கோபமாக ரியாக்சன் கொடுப்பதே வழக்கம்.
கோபம்.. ஆக்ரோஷம்.. இதுதான் கோலியின் குணம்.. அதுவே அவரின் பலம் என்றும் கூட கூறலாம். ஒரு காலத்தில் நம்மை bully செய்த ஆஸ்திரேலிய போன்ற அணிகளை அவர்களின் மண்ணிலே போய் bully செய்த பெருமை எல்லாம் கோலிக்கே சேரும்.

கோலி கோபம்
அதிலும் கோலிக்கு கொஞ்சம் கோபம் அதிகரித்தால் உடனே தனக்கு பேவரைட் கெட்ட வார்த்தை ஒன்றில் திட்டுவார். பென் ஸ்டோக்ஸ் என்ற என்பதில் ரைமிங்காக வரும் வார்த்தை ஒன்றை கோலி சரளமாக பயன்படுத்துவது வழக்கம். வெளிநாட்டு வீரர்களுக்கு எதிராக அதிகமாக கோலி இந்த வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். ரோஹித் சர்மா, ஜடேஜா என்று சக இந்திய வீரர்கள் ஐபிஎல்லில் அவுட் ஆனால் கூட கோலி இப்படி கத்துவது வழக்கம்தான்.

கோலி தோனி
பலரை இப்படி கோலி திட்டினாலும் கூட.. கோலி வெளிப்படையாக திட்டாத ஒரே ஆள் தோனிதான். தோனி அவுட் ஆகும் சமயங்களில் கோலி அதை கொண்டாடி இருக்கிறார். அதை விமர்சையாக கொண்டாடி உள்ளார். ஆனால் நேற்று நடந்த போட்டியில் தோனி அவுட் ஆனதும் கோலி அதை மிக தீவிரமாக கொண்டாடினார். கோபமாக கத்தியவர்.. திடீரென என்ன நினைத்தாரோ B******* என்று கோபமாக கோலி கத்தினார்.

விமர்சனம்
தோனி அவுட்டாகி சோகமாக சென்றதும்.. கோலி இப்படி கத்தியது விமர்சனங்களை சந்தித்துள்ளது. கோலி பொதுவாக தோனி கொண்டாட கூடியவர். தோனி ஒரு மேட்சை பினிஷ் செய்தால் கூட சந்தோசமாக வந்து கோலி அதை பற்றி போஸ்ட் செய்வார். ஆனால் ஏனோ நேற்று தோனி அவுட்டானதும் கோபமாக கொச்சையாக கோலி திட்டினார். கோலி ஏன் இப்படி செய்தார்.. அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

தோனி ரசிகர்கள்
தோனி ரசிகர்கள் பலர்.. கோலி எங்களை ஏமாற்றிவிட்டார். அவர் இத்தனை நாட்கள் தல.. தோனி என்றெல்லாம் புகழ்ந்து பேசினார். இப்போது திடீரென கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். இதுதான் கோலியின் குணம். மஹி - ராட் என்று இருவரின் நட்பை பற்றி புகழ்ந்து பேசியது எல்லாம் தேவையில்லாதது. அவரின் குணமே இதுதான் என்று பொய்ய்யா கோபால்ல்ல் என்று தோனி ரசிகர்கள் கண்ணை கசக்கிகொண்டு இணையத்தில் கண்ணீர்விட்டுள்ளனர்.

விளக்கம்
ஆனால் கோலி ரசிகர்களோ.. இதெல்லாம் தப்பு கிடையாது. கோலி பொதுவாக கோபம் அடையும் குணம் கொண்டவர்தான். அவர் எல்லோரின் மீதும் கோபம் அடைவார். ஆனால் தனிப்பட்ட வெறுப்பு அவருக்கு இருக்காது. அவர் இயல்பே இந்த கோபம்தான். இதை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் கிடையாது என்று கோலி ரசிகர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். ஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்கமும் தோனி - கோலி கட்டிப்பிடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சமாதானம் செய்ய முயன்று உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications