தோனி செய்த பெரிய தவறு! நேற்று நடந்த மேட்சில் கவனிச்சீங்களா?சொல்லி சொல்லி அடித்து காட்டிய வீரர்! ஷாக்
சென்னை: நியூசிலாந்து நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மேட்ச் காரணமாக தற்போது சிஎஸ்கே கேப்டன் தோனிக்கும் முக்கியமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.
உலகக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி இப்போதுதான் சூடு பிடித்து உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான சமீபத்திய போட்டி காரணமாக இந்த தொடர் புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று நெதர்லாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துவிட்டு இந்த தொடருக்குள் நுழைந்த நெதர்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் நம்பிக்கையில் நேற்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. நேற்று முதலில் இறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 322-7 ரன்கள் எடுத்தது. வில் யங் 80 பந்தில் 70 ரன்கள் எடுத்தார்.
அதேபோல் கான்வே 40 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் 46 பந்தில் லாதம் 53 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 51 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் சதம் அடித்த இவர் இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி நம்பிக்கை கொடுத்தார்.
நெதர்லாந்து பேட்டிங்: இதையடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடியது., ஆனால் இவர்கள் ஆட ஆட விக்கெட் விழுந்தது. டாப் ஆர்டரில் யாருமே 20 + ரன்களை கூட எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கோலி மட்டும் அதிரடியாக ஆடி 69 ரன்கள் எடுத்தார் . கடைசியில் வந்த ஸ்காட் 30, ஏங்கல்ஸ் 29 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தனர்.

ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. இதனால் 223-10 ரன்கள் எடுத்து அந்த அணி மொத்தமாக சுருண்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சிஎஸ்கேவில் ஆடும் நியூசிலாந்து வீரர் மிட்சல் சான்ட்னர் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து வீரர் எடுத்த முதல் 5 விக்கெட் பவுலிங் ஆகும் இது.
விமர்சனம்: இந்த மேட்ச் காரணமாக தற்போது சிஎஸ்கே கேப்டன் தோனிக்கும் முக்கியமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. சிஎஸ்கே போட்டிகளில் இவருக்கு தொடர் வாய்ப்பு கொடுக்காததை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சிஎஸ்கேவில் எடுக்கப்பட்டதில் இருந்தே இவருக்கு அணியில் பெரிதாக வாய்ப்புகள் எல்லாம் கிடைப்பது இல்லை. எப்படியாவது பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும். அணியில் இவர் இருப்பதே சந்தேகம்தான். பிராவோ இருந்தவரை இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருந்தது. நியூசிலாந்து அணியில் இவர் மிக முக்கியமான வீரர்.
இவர் 2018ல் இருந்து ஐபிஎல்லில் ஆடி வருகிறார். ஆனால் இவர் 15 வெறும் போட்டிகளில் மட்டும் ஆடும் லெவனில் ஆடி உள்ளார். அதோடு அங்கே சமயங்களில் கேப்டனாக கூட இருந்துள்ளார். ஆனாலும் கூட ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே இவருக்கு பெரிதாக சான்ஸ் கொடுத்ததே இல்லை. ஆனால் அதை பற்றி எல்லாம் இவர் கவலைப்பட்டதே இல்லை. இவர் அதை பற்றி எங்கும் புகார் கொடுத்தது இல்லை. எனக்கு வாய்ப்பு தரவில்லை, என்னை புறக்கணிக்கிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்தது இல்லை.
அதே சமயம் அணியில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் இவர் சிறப்பாக ஆடி உள்ளார். பேட்டிங்கிலும் அவ்வப்போது நம்பிக்கை கொடுத்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications