Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருத்தர் இல்லைனாலும் பரவாயில்லை! லட்டு மாதிரி வீரரை வச்சுக்கிட்டு! தோனி இவரை தூக்குனா எல்லாம் மாறும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிஎஸ்கே அணியில் மோசமாக ஆடி வரும் ஒரு வீரரை நீக்கிவிட்டு வேறு ஒரு வீரரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று தீவிர கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

சிஎஸ்கே அணிக்கு ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பு கொஞ்சம் கொஞ்சாமாக குறைந்து கொண்டே வருகிறது. முதலில் இந்த சீசனில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அதன்பின் அடுத்தடுத்து போட்டிகளில் தோல்வி அடைந்து அதிர்ச்சி கொடுத்தது.

இடையில் சில போட்டிகளில் தேவையின்றி ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி தற்போது சிஎஸ்கே அணிக்கே எதிராக திரும்பி உள்ளது

Why Dhoni should choose Rajvardhan Hangerekkar instead of Theekashan in CSK for next match?

அதிர்ச்சி தோல்வி: இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று முதல்நாள் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது. பேட்டிங் பிட்சை கணிக்க தவறியது, டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இரண்டாவது இன்னிங்சில் பனி காரணமாக பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது ஆகியவை அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 144/6 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிகமாக துபே மட்டுமே 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி ராணா, ரிங்கு சிங் அதிரடி காரணமாக தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடியது. இரண்டு பேருமே அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தனர். இதனால் கொல்கத்தா அணி 18.3 ஓவரிலேயே எளிதாக 147-4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சிஎஸ்கேவின் ப்ளே ஆப் வாய்ப்பு வெகுவாக குறைந்து உள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது.

நீக்க வேண்டும்: சிஎஸ்கே அணியில் தற்போது தீக்சனா மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. அவரும் விருப்பமே இன்றி ஆடிக்கொண்டு இருக்கிறார். ஆப் ஸ்பின் பவுலராக இருந்து கொண்டு சென்னை போன்ற ஸ்பின் பிட்சில் விக்கெட் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். அவரிடத்தில் வேறு வீரர் இருந்திருந்தால் அழகாக விக்கெட் விழுந்திருக்கும்.

இதனால் இவரையும்உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு பவுலரை தோனி களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Why Dhoni should choose Rajvardhan Hangerekkar instead of Theekashan in CSK for next match?

யார்? : ஒரு வெளிநாட்டு வீரர் போனாலும் பரவாயில்லை என்று 3 பேருடன் சிஎஸ்கே அணி ஆட வேண்டும். மீதம் உள்ள ஒரு இடத்தில் இந்திய இளம் பவுலரை இறக்க வேண்டும்.

சிஎஸ்கேவின் ஆடும் அணியில் ராஜ்வர்தன் ஹங்காகேகர் எடுக்கலாம். இவர் விஜய் ஹசாரே, சையது முஷ்டக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடியவர். இவருடைய சிறப்பம்சம் ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு இன் ஸ்விங் செய்ய கூடியவர். பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேனுக்கு ரைட் ஹேண்ட் பவுலர்கள் அவுட் ஸ்விங் செய்வார்கள். ஆனால் ராஜ்வர்தன் ஹங்காகேக இன் ஸ்விங் செய்வார். அதோடு இவரின் இன்னொரு சிறப்பம்சம். இவர் சிறப்பான பேட்ஸ்மேனும் கூட. கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக அடித்து நொறுக்கும் பேட்ஸ்மேன். அண்டர் 19 போட்டிகளில் இவர் முரட்டு அடி அடித்த ஆட்டங்கள் பல உள்ளன.

ஹெலிகாப்டர் ஷாட், ஸ்விப் ஷாட் என்று விதவிதமாக சிக்ஸ் அடிக்க கூடியவர். கடந்த அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெல்ல ஐவரும் முக்கிய காரணமாக இருந்தார். இதில் ராஜ்வர்தன் ஹங்காகேகர் 141 கிமீ வேகத்தில் பவுலிங் வீசினார். லோக்கல் போட்டிகளில் இவர் 148 கிமீ வரை பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சையது முஷ்டாக் கோப்பை தொடரிலும் இவர் சிறப்பாக ஆடினார். இவரை ஆடும் அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+