இவங்க ரெண்டு பேரும் எதுக்கு இருக்காங்க! சிஎஸ்கே அணியில் பெரிய பிரச்சனை! என்ன செய்வார் தோனி? குழப்பம்
சென்னை: சிஎஸ்கே அணியில் ஆடும் முக்கியமான 2 வீரர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன.
சிஎஸ்கே அணி வரிசையாக இரண்டு தோல்விகளை சந்தித்த நிலையில் அந்த இரண்டு வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

சிஎஸ்கே பவுலிங்கில் மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். இவர்களின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் பலம் கொடுத்துள்ளது.
ஆனால் மொயின் அலி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. அவரின் பேட்டிங் பார்மில் இல்லை. பவுலிங்கும் பெரிய பார்மில் இல்லை. அவர் பெரிதாக எந்த போட்டியிலும் விக்கெட் எடுக்கவில்லை.
பவுலிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். பேட்டிங்கிலும் எந்த இடத்தில் இறங்கினாலும் பெரிதாக ஆடுவது இல்லை. அதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் சாண்ட்னர் ஆட வாய்ப்புகள் உள்ளன.
இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக போட்டியில் சிஎஸ்கே வீரர் மிட்சல் சாண்ட்னர் சிறப்பாக ஆடினார். மும்பைக்கு எதிராக நடந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி எளிதாக வென்றது. முதலில் இறங்கிய மும்பை அணி சிஎஸ்கேவின் சான்டர், ஜடேஜாவின் சூழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். சான்டர் 3, ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் சிஎஸ்கே வீரர் சாண்ட்னர் 4 ஓவரில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். லக்னோவிற்கு எதிரான போட்டியில் வெறும் 21 ரன்களை கொடுத்து ரன் செல்வதை கட்டுப்படுத்தி 1 விக்கெட் எடுத்தார்.

இதனால் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணியில் தற்போது அம்பதி ராயுடு மீது கடுமையான விமர்சனங்கள் வருகின்றன. கடந்த 5 போட்டிகளில் அவரின் ரெக்கார்ட் மிக மோசமாக உள்ளது.
இன்னிங்ஸ்:- 5
ரன்கள்:- 74
சராசரி:- 24.67
ஸ்டிரைக் ரேட்:- 148
அவர் மிடில் ஆர்டரில் ஆடி சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் தொடர் பின்னடைவை கொடுத்து வருகிறார். ஒரு போட்டியை தவிர வேறு எதிலும் அவர் நம்பிக்கை அளிக்கவில்லை.
அம்பதி ராயுடு இந்த சீசன் ஆடவே விரும்பவில்லை. அவர் ஏற்கனவே ரிட்டயர்மெண்ட் அறிவித்துவிட்டார். ஆனால் விருப்பம் இன்றி சென்றவரை பிடித்து இழுத்துவைத்து சிஎஸ்கே அணி தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இதனால் இவரை உடனே நீக்க வேண்டும். அவருக்கு பதில் வேறு மிடில் ஆர்டர் வீரரை தோனி களமிறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இவர்கள் இருவரும் நீக்க வேண்டும். அதற்கு பதிலாக அணிக்குள் மிட்சல் சான்டர் மற்றும் ஒரு இந்திய வீரரை கொண்டு வர வேண்டும். இவர்கள் இந்திய அணியில் இருப்பதால்தான் அணிக்குள் பெரிய குழப்பமே நிலவி வருகிறது.
இவர்களை நீக்க வேண்டும். மாறாக ராயுடுவிற்கு பதிலாக ராஜவர்தான் ஹங்கரேக்கர் போன்றவர்களை உள்ளே கொண்டு வர வேண்டும். அவர் நல்ல ஹிட்டர். அதேபோல் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடிய வீரர். அதனால் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications