அண்ணாமலை எடுத்த அஸ்திரமல்ல.. அண்ணாமலையே அஸ்திரம் தான்.. பாஜக பிளான்.. அதிமுகவுக்கு பெரிய ட்விஸ்ட்
சென்னை: அதிமுகவின் கோபம் அண்ணாமலையை தாண்டி பாஜக மேலிடத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. கடந்த சில மாதங்களில் நடந்த அரசியல் நடந்த மாற்றங்களை கவனித்து வந்த அதிமுக, பிரதமர் மோடி தமிழகத்தில் வந்து பேசியதை பார்த்த பின் அதிமுக தனது தாக்குதலை அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பச்சமுத்துவின் ஐஜேகே தவிர மற்ற கட்சிகள் திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. தேமுதிக, பாமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.. பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் கட்சி மற்றும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை மட்டும் இணைந்துள்ளன. தேமுதிக மற்றும் பாமகவை தங்கள் பக்கம் இழுக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இன்னமும் முடிவுகள் வெளியாகவில்லை.

தேர்தல் கூட்டணி ஒரு பக்கம் எனில் அதிமுக இந்த முறை திமுகவை தாண்டி, பாஜகவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது. பாஜக உடன் 2019 மற்றும் 2021 ஆகிய தேர்தலில் கூட்டணியில் அதிமுக இருந்தது. ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது. ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்தால் ஏற்பட்ட பிரச்சனை, சின்னம் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை எல்லாம் நீதிமன்றத்தில் தீர்வு கண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, அதிரடியாக பாஜக கூட்டணியை முறித்தது.
அதேநேரம் அண்ணாமலையின் பேச்சு மற்றும் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அண்ணாமலை பெரியாரை விமர்சித்தார். அதன்பிறகு ஜெயலலிதா ஊழல் காரணமாக சிறை தண்டனை பெற்றதாக விமர்சித்தார். இந்த இரண்டுக்குமே அதிமுக தரப்பிர் எதிர்வினை இருந்தது. குறிப்பாக ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய போது அதிமுக கடும் எதிர்வினை ஆற்றியது. இறுதியாக அண்ணாவை பேசிய உடன் கொந்தளித்த அதிமுக, அப்படியே பாஜக உடனான உறவை முறித்துக் கொண்டது.
பாஜக உடன் கூட்டணியில இருந்த காரணத்தால் சிறுபான்மை மற்றும் தலித் ஓட்டுக்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தான் 2021 தேர்தலில் தோற்க வேண்டிய நிலை வந்தது என்று அதிமுகவின் முக்கிய தலைவர்கள் சிலரே வெளிப்படையாக பேசினார்கள். எனினும் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவினை மிக நீண்ட விவாதத்திற்கு பிறகு அதிமுக மேலிடம் எடுத்தது. அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஏற்காதது தான் கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணம் என்றும் அப்போது பேசப்பட்டது.
அண்ணாமலையை மட்டுமே கண்டித்து அதிமுக கூட்டணியை முறித்த நிலையில், பாஜக மேலிடத்தை விமர்சிக்கவே இல்லை. பாஜக மேலிடத்திடம் மென்மையான போக்கையே கடைபிடித்து வந்தது. இந்நிலையில் அண்மையில் வந்த கருத்துக்கணிப்பு ஒன்றில் அதிமுகவை விட பாஜக அதிக தொகுதிகளில் வெல்லும் என்று கூறப்பட்டதால் அதிமுக தலைமை கொதித்து எழுந்தது.. அதேநேரம் பாஜக ஆதரவாளர்கள் முன்பைவிட அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள். ஏன் திமுகவைவிடவும் அதிமுகவை விமர்சிக்க தொடங்கினார்கள். இப்படி அடுத்தடுத்த நிகழ்களால் அதிர்ச்சி அடைந்த அதிமுக, அதிரடியாக வியூகத்தை மாற்றி அண்ணாமலை மற்றும் தமிழக பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சிக்க தொடங்கியது.
இது ஒருபுறம் எனில் கொங்குமண்டல அதிமுக தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக வெளியான தகவலால் எடப்பாடி பழனிச்சாமியே அதிர்ச்சி அடைந்தார். அண்மையில் அண்ணாமலை பேட்டி அளித்த போது, "நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள், மிகப்பெரிய ஆட்கள் பாஜகவில் இணையத்தான் போகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை நாங்கள் யாரையும் இணைய கூப்பிடவில்லை. அவர்களாகவே வந்து கட்சியில் இணைகிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை வெற்றி பெற வைக்க, சாம தண்ட பேத தானம் என எல்லாவற்றையும் பயன்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.
இதனிடையே அண்ணாமலை பேட்டி வெளியான உடனேயே பதிலடி கொடுக்க தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, யாரையும் கட்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க வேலை செய்தார். அதேநேரம் பாஜகவிற்கு எதிராக ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், ஆர்பி உதயகுமார் என வரிசையாக எல்லாரும் களம் இறங்கி பேச தொடங்கினார்கள். இதற்கு காரணம் அண்மையில் மோடி பேசியதுதான்.
அண்ணாமலையை முன்னிறுத்தி பிரதமர் மோடி பேசிய பேச்சால், அதிர்ச்சி அடைந்த அதிமுக, முன்பைவிட கடுமையாக பாஜகவை தற்போது விமர்சிக்க தொடங்கி உள்ளது. அண்ணாமலை எடுக்கும் அஸ்திரங்களை பார்த்த அதிமுகவிற்கு, அண்ணாமலையே அதிமுகவிற்கு பாஜக மேலிடத்தின் பெரிய அஸ்திரம் என்பது தாமதமாகவே தெரிந்திருக்கிறது. அதிமுகவின் ஓட்டுக்களை அப்படியே பாஜக ஓட்டுக்களாக மாற்ற அண்ணாமலை மற்றும் பாஜக மேலிடம் வியூகம் அமைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதை முறியடிக்க அதிமுக கடும் எதிர்வினையாற்ற தொடங்கி உள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications