Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிளான் பாண்டா".. தமிழ்நாட்டை சமாளிக்க முடியாது.. திரும்பி வடஇந்தியாவிற்கே போன பாஜக மாஸ்டர்மைண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக 3 மத்திய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹொல் துணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

முன்னதாக தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக பையஜயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவரின் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அசாம் மாநில தேர்தல் பொறுப்பாளராக பாண்டா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

பாண்டா பிளான் தோல்வி

பாண்டா பெரிய திட்டத்துடன்தான் தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பாளராக களமிறக்கப்பட்டார். ஆனால் இப்போது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார். பாஜக தேசிய துணைத் தலைவரும், தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தவருமான பையஜயந்த் பாண்டா தலைமையிலான பாஜக குழுவினர் கடந்த அக்டோபர் 7 அன்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சென்னையில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

பாண்டாவுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் துணைத் தலைவர் ஆர்.என். ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் சென்றிருந்தனர். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பாண்டா, அதிமுக தலைவரை சந்தித்தது அதுவே முதல்முறை.

பீகார் மாடல்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக பையஜயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்ட நிலையில் பீகாரில் பாஜகவிற்கு வெற்றியை கொடுத்த அதே மாடலை இங்கே பின்பற்ற பாஜக முடிவு செய்ததாக கூறப்பட்டது. பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி (NDA) பெரும் வெற்றியை பதிவு செய்தது. பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 202 இடங்களில் வெற்றியை பெற்றது. பாஜக 89 இடங்களிலும் , ஜேடியு 85 இடங்களிலும் வென்றது.

பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

பீகார் வெற்றிக்கு காரணம்

அங்கே பீகார் வெற்றிபெற காரணம் முறையாக கூட்டணி அமைத்தது. எலியும் பூனையுமாக இருந்த சிராஜ் பாஸ்வான் - நிதிஷ் குடும்பத்தை சேர்க்க காரணமாக இருந்தது பாஜக வியூகம்தான். அதேபோல் நிதிஷ் - பாஜக இடையே இருந்த கருத்து வேறுபாட்டை போக்கவும் காரணமாக இருந்தது பாஜகவின் திட்டம்.

இதே திட்டத்தை தமிழ்நாட்டில் பாண்டா களமிறக்க உள்ளதாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதேபோல் அதிமுக உள்ளேயே உட்கட்சி மோதல் உள்ளது. செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இந்த பிரச்சனைகளை எல்லாம் பாண்டா வரும் காலங்களில் சரி செய்வார் என்று கூறப்பட்டது.

பீகார் பாஜக பிளான்

பீகார் தேர்தலில் NDA வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவிலான கட்சி விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல பாஜக தலைவர்களையும், வியூக நிபுணர்களையும் அடுத்த சில மாதங்களுக்கு தமிழகத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளதாக டெல்லியில் உள்ள மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

கட்சி வட்டாரங்களின்படி, பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள், இப்போது தமிழகத்திற்கு மாற்றப்படவுள்ளனர். இந்தத் தலைவர்கள் களப்பணி, வாக்குச்சாவடி மேலாண்மை, வாக்காளர் ஆலோசனை மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

திடீர் திருப்பம் - பாண்டா திருப்பி அனுப்பப்பட்டார்

பாண்டா பெரிய திட்டத்துடன்தான் தமிழ்நாட்டின் தேர்தல் பொறுப்பாளராக களமிறக்கப்பட்டார். ஆனால் இப்போது திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார். இதற்கு காரணம் அவரால் அதிமுகவை ஒருங்கிணைக்க முடியாததே காரணம் என்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இணைப்பை பாண்டாவால் ஏற்படுத்த முடியவில்லை. அதேபோல் டிடிவி தினகரனை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முடியவில்லை. முக்கியமாக தமிழ்நாட்டில் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்ததை தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை. இந்த கூட்டணியிலும் வேறு யாரும் சேரவில்லை. தேமுதிகவை சேர்க்க முடியவில்லை, பாமகவை சேர்க்க முடியவில்லை.. சேர்ப்பதாக இருந்தாலும் எந்த பாமக அணியை சேர்ப்பது என்று தெரியவில்லை.

இன்னொரு பக்கம் செங்கோட்டையனே அமித்ஷா பேச்சை கேட்காமல் தவெக போய்விட்டார். எடப்பாடி அதிமுகவும் பலகீனப்பட ஆரம்பித்துள்ளது. அதிமுக உடைகிறது - இன்னொரு பக்கம் அதிமுகவில் உள்ள மற்ற சிலரும் கூட உடைந்து வெளியே போவதாக செய்திகள் வருகின்றன. வைத்திலிங்கம், மாபா பாண்டியராஜ் ஆகியோர் தவெக செல்வதாக செய்திகள் வருகின்றன. அதையாவது அதிமுக தடுக்குமா.. இல்லை அமித் ஷா பிரஷர் போட்டு தடுப்பாரா என்ற கேள்வி உள்ளது.

இதை எல்லாம் பாண்டா தடுக்க தவறிவிட்டார். இதன் காரணமாகவே முன்பு அதிமுக உட்கட்சி மோதலை கையாண்ட அனுபவம் கொண்ட பியூஸ் கோயல் மீண்டும் தேர்தல் பொறுப்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+