மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதலாம்.. சிபிஎஸ்இ கொடுத்த இன்ப அதிர்ச்சி.. மேஜர் ட்விஸ்ட்
சென்னை: மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை வரும் கல்வியாண்டில் நவம்பர் மாதத்தில் நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களை புத்தகத்தை பார்த்து எழுதலாம் என்று அறிவித்துள்ளது.
தேர்வு சீர்திருத்தம் குறித்து ஆராய, கான்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையில், வல்லுனர் குழுவை, கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. இந்த குழு, தேர்வு சீர்திருத்த வரைவு அறிக்கையை அப்போது வெளியிட்டது. மாணவர்களின் கூர்ந்தாய்வு, செயல் முறை, உடனடி முடிவு எடுக்கும் ஆற்றல், ஆழ்ந்த ஆய்வறிவு என, பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் வகையில், தேர்வுகள் நடத்த பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

கணினி முறையில் தேர்வு, உயர் சிந்தனை ஆய்வு திறன் தேர்வு, சிக்கலான பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது, புத்தகங்களை பார்த்து பதில் எழுதுவது உள்ளிட்ட 12 பரிந்துரைகளை அப்போது கான்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர் பிரேம்குமார் கல்ரா தலைமையிலான குழு பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகளின் படி, புதிய முயற்சிகளை அவ்வப்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முயற்சித்து வருகிறது.
அந்த வகையில் சிபிஎஸ்இ, கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுதும் முறையை பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, வரும் கல்வியாண்டில் நம்பவர் மாதம் நடைபெற உள்ள தேர்வை, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந்து எழுத அனுமதிக்கவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை புத்தகத்தை பார்த்து புரிந்து எழுத அனுமதிக்கவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாம். சோதனை அடிப்பைடையில் இந்த முயற்சியை சிபிஎஸ்இ மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தேர்வு எப்படி என்றால் மாணவர்கள் கையில் பிட்டுகள், பாடப்புத்தகங்கள் அல்லது பிற ஆய்வுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவற்றை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்டுவார்கள். அப்புறம் எதற்கு பரீட்சை என்கிறீர்களா.. இங்கு தான் சிக்கலே சிபிஎஸ்இ தேர்வுகள் ஒன்றும் படித்ததை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் அல்லது நினைவுப்படுத்தி எழுதுவும் முறையில் தேர்வுகளை வைக்கவில்லை. அந்த தேர்வுகள் மிகவும் சவாலானதாக இருக்கும்.
புத்தகமே கையில் இருந்தாலும், அதனை எப்படி மாணவர் புரிந்து கொண்டார் அதில் உள்ள விஷயங்களை எந்த அளவிற்கு உள்வாங்கியுள்ளார். புத்திசாலித்தனத்தையும், வியூகத்தையும் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை ஒட்டி கேள்விகள் இருக்கும். எளிதாக சொல்வது என்றால் பாடப்புத்தகத்திலிருந்து விடைத்தாளில் உள்ள உள்ளடக்கத்தை எழுதும் தேர்வாக இந்த தேர்வு இருக்காது. ஒருவரின் புத்தி கூர்மையை சோதிக்கும் தேர்வாக இருக்கும். எனவே புத்தகத்தை எடுத்து சென்றாலும் எந்த பயனும் இருக்காது.
இந்த தேர்வினை இந்த ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சோதனை அடிப்படையில் நடத்த முடிவு செய்துள்ள சிபிஎஸ்இ, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளிலும் இந்த சோதனை தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதை விரைவில் முடிவு செய்யும். உயர்தர சிந்தனை திறன்கள், பயன்பாடு, பகுப்பாய்வு, விமர்சனங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மதிப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மையமாக கொண்டு சிபிஎஸ்இ தேர்வு முறையை மாற்றி உள்ளது.
வரும் ஜூன் மாதத்திற்குள் OBE என்ற முறையிலான மாதிரி தேர்வு குறித்த கேள்வித்தாளை வடிவமைத்து முடிக்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல்லி பல்கலைக்கழகத்தை (DU) ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளது. முன்னதாக கொரோனா தொற்றுக்கு நடுவில் கடந்த ஆகஸ்ட் 2020 இல் கடும் எதிர்ப்பையும் மீறி, புத்தகத்தை பார்த்து எழுதும்படி, டெல்லி பல்கலைக்கழகம் முயற்சி செய்தது. இந்த தேர்வினை வெற்றிகரமாக டெல்லி பல்கலைக்கழகம் நடத்திய நிலையில் அதே முயற்சியி சிபிஎஸ்இ மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக சிபிஎஸ்இ பாடத்திட்டக் குழு கடந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய OBE மதிப்பீட்டு தேர்வு முறையை மாணவர்கள் புரிந்துகொள்வதையும் ஏற்றுக்கொள்வதையும் உறுதிசெய்ய உயர்தர பாடப்புத்தகங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை விவாதித்து வந்தது. அந்த கூட்டத்தில் தான் சில ஆசிரியர்கள் புத்தகங்களை பார்த்து புரிந்து எழுதும் முயற்சி குறித்து முன்மொழிந்தனர். அதைத்தான் சோதனை முயற்சியாக செய்து பார்க்க போகிறது சிபிஎஸ்இ.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications