Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் எப்போது என்ன வேண்டுமானலும் நடக்கும்.. ஒரு நாள் உச்சத்தில் இருந்தவர்.. அடுத்த நாளே பாதாளத்திற்கு போகலாம்.. திடீரென அரசியலில் மேலே வந்தவர்களும் உண்டு.. அப்படியே காணாமல் போனவர்களும் உண்டு.. இதற்கு சமீபத்திய உதாரணம்.. ஐ.பரந்தாமன்.

திமுகவின் இளம் முகங்களில் ஒருவர்.. முக்கியமான தலித் முகமாக சென்னையில் வளர்ந்து வந்தவர் எழும்பூர் ஐ பரந்தாமன். ஆனால் அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அங்கே திமுகவிற்காக தீவிரமாக உழைத்த இன்னொரு இளம் முகமான தமிழன் பிரசன்னா களமிறக்கப்பட்டு உள்ளார். தனித்தொகுதியான எழும்பூரில் கிட்டத்தட்ட திமுகவின் அடையாளமாக மாறி இருந்தவர் ஐ பரந்தாமன்.

Paranthaman

இப்போது அவருக்கே அங்கே இடமில்லை. தமிழன் பிரசன்னா நல்ல தேர்வாக இருந்தாலும்.. ஐ பரந்தாமன் நீக்கப்பட்டதுதான் இப்போது ஹாட் டாப்பிக். கண்ணியமான செயல்பாடுகள், நாகரிகமான பேச்சு எனத் தன்னை ஒரு பண்பட்ட அரசியல்வாதியாக நிலைநிறுத்திக் கொண்ட ஒருவருக்கு, உட்கட்சிப் பூசல்களால் நேர்ந்திருக்கும் இந்த நிலை ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஏன் இந்த முடிவு? சாத்தியமான காரணங்கள்:

பரந்தாமன் ஒரு வேட்பாளர் என்பதைத் தாண்டி, கட்சியின் மிக முக்கியமான தலித் முகமாக அடையாளப்படுத்தப்பட்டவர். சர்ச்சைகளே இல்லாத டாப்-5 தலைவர்கள் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஒரு இடமுண்டு. அப்படிப்பட்டவர் ஏன் திடீரென நீக்கப்பட்டார்? சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:

நிழல் உலக அரசியல்: பின்னணியில் நடந்த சில ரகசியப் பேச்சுவார்த்தைகளும், 'பேக் ரூம்' லாபிகளும் ஒரு தகுதியான நபரின் வாய்ப்பைப் பறித்திருக்கலாம்.

உட்கட்சிப் பூசல்: தொகுதியில் இருக்கும் உள்ளூர் நிர்வாகிகளுக்கும் இவருக்குமான முரண்பாடுகள் மலிவான அரசியல் சூழ்ச்சியாக மாறி, தலைமையின் முடிவை மாற்றியிருக்கலாம். முக்கியமாக லோக்கல் நிர்வாகிகளை இவர் ஆதரிக்கவில்லை, அவர்களை வளரவிடவில்லை என்றும் கூறப்படுகிறது.

பலி ஆடு: சில நேரங்களில் கட்சியின் மேலிடக் கணக்குகளுக்காக, எந்தப் புகாரும் இல்லாத மென்மையான போக்கைக் கொண்டவர்கள் 'பலி ஆடாக' மாற்றப்படுவது அரசியலில் வாடிக்கை.

சமயங்களில் திமுகவில் சிலருக்கு 5 வருடம் ரெஸ்ட் தரப்படும். தர்மபுரி எம்பி செந்தில் குமார் ரெஸ்ட் கொடுக்கப்பட்டு இப்போது சட்டசபை தேர்தலில் பாலக்கோடு வேட்பாளர் ஆகி உள்ளது போல இவருக்கும் தலைமை ரெஸ்ட் கொடுத்திருக்கலாம் என்கிறார்கள்.

எழும்பூருக்குப் பேரிழப்பு?

எழும்பூர் தொகுதியில் ஒரு நல்ல பிம்பத்தைக் கொண்டிருந்த பரந்தாமன், இப்போது ஓரம்கட்டப்பட்டு இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் தமிழன் பிரசன்னா போன்றவர்கள் நீண்ட காலம் வாய்ப்புக்கு காத்திருந்ததும் இந்த தேர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

திமுக வேட்பாளர்கள் லிஸ்ட்

திமுக வேட்பாளர்களின் முழுப்பட்டியல் விவரம் இதோ

கன்னியாகுமரி - மகேஷ்
ராதாபுரம் - அப்பாவு
நாகர்கோவில் - ஆஸ்டின்
ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன்
தென்காசி - கலை கதிரவன்
கோவில்பட்டி - க.கருணாநிதி
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
முதுகுளத்தோர் - ராஜ கண்ணப்பன்
அருப்புகோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்
பரமக்குடி - கதிரவன்
போடிநாயக்கம் - ஓ.பன்னீர்செல்வம்
மதுரை மத்தியம் - பி.டி.ஆர்.பழனிவேல்
சோழவந்தான்- வெங்கடேசன்
திருப்பத்துர் - பெரியகருப்பண்
மதுரை கிழக்கு - மூர்த்தி
திருமயம் - ரகுபதி
ஒரத்தநாடு - வைத்தியலிங்கம்
கும்பகோணம் - அன்பழகன்
தஞ்சாவூர் - இராமநாதன்
மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா
குறிஞ்சிப்பாடி - எம்ஆர் கே பன்னீர்செல்வம்
திட்டக்குடி - சி.வி.கணேசன்
அரியலூர் - லதா பாலு
குன்னம் - சிவசங்கர்
பெரம்பலூர் - ஜெயலட்சுமி
நெய்வேலி - சபா ராஜேந்திரன்
மணச்சநல்லூர் - கதிரவன்
லால்குடி -பாரி வள்ளல்
மண்ணச்சநல்லூர் - கதிரவன்
திருச்சி கிழக்கு -இனிகோ இருதயராஜ்
திருச்சி மேற்கு - கே.என்.நேரு
ஸ்ரீரங்கம் - துரைராஜ்
வேடசந்தூர் - சாமிநாதன்
நிலக்கோட்டை -நாகஜோதி
ஆத்தூர் -பெரியசாமி
ஒட்டன்சத்திரம் -சக்கரபாணி
முதுமலைப்பேட்டை - ஜெயக்குமார்
கிணத்துக்கடவு - சபரி கார்த்திகேயன்
கோயம்புத்தூர் தெற்கு - செந்தில் பாலாஜி
பல்லடம் - செல்வராஜ்
அவிநாசி - கோகிலாமணி
குன்னூர் - ராஜு
கோபிசெட்டிபாளையம் - நல்லசிவம்
அந்தியூர் - சிவபாலன்
தாராபுரம் - இந்திராணி
கூடலூர் - திரவிட மணி
குமாரபாளையம் -பாலு
நாமக்கல் - ராணி
தாராபுரம் - டாக்டர் இந்திராணி
சேலம் தெற்கு - லோகநாதன்
ராசிபுரம் - மதிவாணன்
சேலம் வடக்கு -ராஜேந்திரன்
எடப்பாடி - காசி
ரிஷிவந்தியம் -வசந்த் கார்த்திகேயன்
திருக்கோவிலூர் - பொன் கௌதம சிகாமணி
செஞ்சி - மஸ்தான்
ஆரணி - மகாலட்சுமி
விழுப்புரம் - லட்சுமணன்
கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி
செங்கம் - கிரி
அரூர் - சண்முகம்
பாலக்கோடு - செந்தில்குமார்
திருவண்ணாமலை - ஏ.வ.வேலு
திருப்பத்தூர் - நல்லதம்பி
பாப்பிரெட்டிப்பட்டி - பழனியப்பன்
ஓசூர் - சத்யா
அணைக்கட்டு -நந்தகுமார்
வேலூர்- கார்த்திகேயன்
ராணிப்பேட்டை - வினோத் காந்தி
காட்பாடி - துரைமுருகன்
உத்திரமேரூர் -சுந்தர்
தாம்பரம் - கிருத்திகா தேவி
மயிலாப்பூர் - தா.வேலு
சைதாப்பேட்டை மா.சுபிரமணியன்
தி.நகர் - ராஜா அன்பழகன்
ஆயிரம் விளக்கு - எழில்
சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின்
துறைமுகம் - சேகர் பாபு
எழும்பூர் - தமிழன் பிரசன்னா
விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா
வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன்
பெரம்பூர் - ஆர்டி சேகர்
அம்பத்தூர் - பூர்ணிமா
மதுரவாயில் - காரப்பாக்கம் கணபதி
பூந்தமல்லி - கிருஷ்ணசாமி
ஆவடி - நாசர்
கொளத்தூர் - மு க ஸ்டாலின்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+