ஸ்டாலின் ரேடாரில் வந்த மஸ்தான்! சரியில்லையே.. தூக்கிடலாம்! அமைச்சர் பதவியை பறிக்க இப்படி ஒரு காரணமா?
சென்னை: சிறுபான்மைத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான் பதவியை நீக்க முக்கியமான சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை அவ்வளவு சாதாரணமாக எடுத்துவிடவில்லை என்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே தமிழ்நாடு அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர். அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தங்கம் தென்னரசு நிதித்துறையுடன், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
நீக்கப்பட்ட அமைச்சர்கள்: செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் அமைச்சர்களாக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
என்ன காரணம்?: சிறுபான்மைத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான் பதவியை நீக்க முக்கியமான சில காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த முடிவை அவ்வளவு சாதாரணமாக எடுத்துவிடவில்லை என்கிறார்கள்.
1. செஞ்சி மஸ்தான் விழுப்புரத்தில் கட்சி பணிகளில் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
2. தனது குடும்பத்தினரை கட்சி பணிகளில் அதிகம் தலையிட வைத்து மாவட்ட நிர்வாகிகளை செயல்படவிடவில்லை என்று முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் சென்றுள்ளதாம்.
3. இதனால் முதல்வர் ஸ்டாலின் ரேடாரில் கடந்த சில மாதங்களாகவே செஞ்சி மஸ்தான் இருந்துள்ளாராம்.
4. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் அமைச்சர் பொன்முடிக்கும் இவருக்கும் விழுப்புரத்தில் கருத்து வேறுபாடு அதிகரித்து உள்ளது.
5.முக்கியமாக அமைச்சராக டெண்டர் விவகாரங்களில் செஞ்சி மஸ்தான் தனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளார். ஏன் கட்சியிலேயே சிலருக்கு இதனால் டெண்டர் கிடைக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
6. தனிப்பட்ட வகையில் அமைச்சராகவும் செஞ்சி மஸ்தான் செயல்பாடு சரியில்லை என்று புகார்கள் சென்றுள்ளதாம். இதன் காரணமாகவே சிறுபான்மைத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான் பதவியை நீக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நாசருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் முத்துச்சாமியிடம் கூடுதல் பொறுப்பாக மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் இருந்தது. இரண்டும் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின்: இது போக நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவி ஏற்று உள்ளார். ஒரு பக்கம் அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில்.,. இன்னொரு பக்கம் உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications