வீட்டுக்கு வாங்க! ஸ்டாலின் போட்ட மெசேஜ்! 10 அமைச்சர்கள் சட்டென வர! என்ன நடந்தது சித்தரஞ்சன் சாலையில்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேற்று 10 முக்கியமான அமைச்சர்களை அழைத்து பேசி இருக்கிறார். சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் தனது வீட்டிற்கே அழைத்து ஸ்டாலின் பேசி உள்ளார்.
நேற்று முதல்வர் ஸ்டாலின் 10 அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் அவரின் வீட்டில் மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங்கில் பல்வேறு முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. அதில் முதல்வர் ஸ்டாலின், நாம் வரிசையாக 11 தேர்தல்களில் வென்று உள்ளோம்.

மக்கள் நம் மீது முழு மதிப்பு வைத்துள்ளனர். சில சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் தவிர அரசு மீது பெரிய புகார்கள் இல்லை. இப்படி இருக்க சட்டசபை தேர்தலுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். சரியான திசையில் செல்ல வேண்டும். மக்கள் சொல்லும் குறைகளை கேட்க வேண்டும்.
ஆட்சியில் நல்ல திசையில் செல்ல அவ்வப்போது நம்மை நாமே மாற்றிக்கொள்வது அவசியம் . அமைச்சரவையை மாற்றும் போது அதில் புதிய வேகம் ஏற்படும். அதில் ஏற்படும் சுணக்கங்கள் கூட போகும். அப்படித்தான் இந்த முறையும் செய்ய வேண்டும்.
மக்களின் கோரிக்கை மற்றும் அமைச்சரவை சுணக்கங்களை போக்குவதை மனதில் வைத்தும், தேர்தலை கருத்தில் கொண்டும் அமைச்சரவையை மாற்றலாம். சில முக்கியமான முடிவுகளை வரும் நாட்களில் எடுப்பேன். அதற்கு உங்களுக்கு ஒத்துழைப்பு முழுமையாக இருக்க வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் பிளான்: இது போக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் பயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாம். முன்பு போடப்பட்ட பயண திட்டம் அப்படியே மாற்றப்பட்டு உள்ளதாம். மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மாதம் 22-ந்தேதி அமெரிக்காவிற்கு செல்லவிருப்பதாக தகவல் சொல்லப்பட்டு வருகிறது.தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.
பயண திட்டத்தில் மாற்றம்: அதே சமயம் உடல் நலன் குறித்த மருத்துவ பரிசோதனைக்காகவும் ஸ்டாலின் செல்கிறார் என்றும் தகவல் பரவியிருந்தன. ஆனால், அந்த பயணத்திட்டம் சற்று மாற்றப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வருகின்றன. அதாவது, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து விட்டு அதன்பிறகு வெளிநாடு செல்லலாம் என ஆலோசிக்கப்படுகிறது.
வேறு முக்கிய வேலை: முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அமைச்சரவை மாற்றம்: சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனியர்களாக இருக்கும் 10 அமைச்சர்களைத்தான் டெல்லி டார்கெட் செய்கிறது. அப்படித்தான் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தனர். தற்போது ஏவ வேலுவை டார்கெட் செய்கின்றனர். இடையில் பொன்முடியை டார்கெட் செய்தனர். இப்படி சீனியர்களாக இருக்கும் 10 பேரைத்தான் டார்கெட் செய்து வருகின்றனர்.
சீனியர்களாக இருக்கும் நபர்கள்தான் டெல்லியின் பொறியில் சிக்கி உள்ளனர். இதில் சிலர் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications