விஜய் ஏன் பசும்பொன் சென்று தேவருக்கு மரியாதை செலுத்தவில்லை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்துராமலிங்கத் தேவரின் 119வது ஜெயந்தி விழாவையொட்டி முதல்வர் விஜய் நந்தனத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிலையில், விஜய் பசும்பொன் செல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

முத்துராமலிங்கத் தேவரின் 119வது ஜெயந்தி விழா பசும்பொன்னில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. முக்குலத்தோர் சமூக மக்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். தவெக தரப்பில் அமைச்சர்கள் சிடிஆர் நிர்மல்குமார், ராஜிவ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Vijay Pasumpon Thevar Jayanthi

ஆனால் முதல்வர் விஜய் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வரவில்லை. மாறாக நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார். விஜய் பசும்பொன் வராததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக இம்மானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவில் பங்கேற்க விஜய் வரவில்லை.

மாறாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வந்தால், அது தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். ஏனென்றால் விஜய்க்கு சட்டசபைத் தேர்தலில் தலித் வாக்கு வங்கி மிகப்பெரிய அளவில் கிடைத்தது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் தலித்துகள் பெரும்பான்மையாக இருந்த தொகுதிகளில் தவெக அதிகளவில் வெற்றி பெற்றது.

இதன் காரணமாகவே தவெக அமைச்சரவையில் 8 தலித்துகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் தலித் வாக்கு வங்கியை இழக்க விஜய் விரும்பவில்லை என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விஜய் வந்தால், பசும்பொன்னில் பிரச்சனை உருவாகலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாக சொல்லப்படுகிறது.

அதிக கூட்டம் கூடும் போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு கொடுப்பது கூடுதல் சிக்கலாகும் என்று காவல்துறையினரும் அறிவுறுத்தி இருக்கின்றனர். அதிமுகவின் வாக்கு வங்கியை மொத்தமாக கைப்பற்ற நினைக்கும் விஜய், பசும்பொன் வராமல் தவிர்த்திருப்பது விவாதமாகி இருக்கிறது. இதனால் விஜய் பசும்பொன் வராததன் பின்னணி தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+