அவிநாசியில் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு! திடீர்னு தவெகவில் தனபால் மகன் லோகேஷ் இணைந்தது ஏன்?
சென்னை: அவிநாசி சட்டசபை தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு கொடுத்திருந்த நிலையில் திடீரென அதிமுக முன்னாள் சபாநாயகரும் இன்னாள் எம்எல்ஏவுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் இணைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனபால் மகன் லோகேஷ், பி.காம், எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். சேலத்தில் பிறந்த லோகேஷ் தமிழ்செல்வன் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட லோகேஷ், 3 ஆவது இடத்தை பெற்றார். அதாவது அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பாஜக வேட்பாளர் எல்.முருகனுக்கு கிடைத்தது. முருகனுக்கும் லோகேஷுக்கும் இடையே கிட்டதட்ட 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் ஆகும்.
அவிநாசி தொகுதி
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தனது தந்தை எம்எல்ஏவாக இருந்து வரும் அவிநாசி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கினாராம். 2 மாதங்களில் என்ன நடந்தது என தெரியவில்லை. தற்போது சப்தமின்றி லோகேஷ் தவெகவில் இணைந்துவிட்டார்.
1984 முதல் அதிமுக கோட்டை
அவிநாசி அதிமுகவின் கோட்டையாகும். இங்கு 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்தே அதிமுக வென்று வருகிறது. இடையில் 1996 ஆம் ஆண்டு மட்டும் திமுக வென்றிருக்கிறது. மற்றபடி 1984 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக வேட்பாளரே வென்றுள்ளார்.
சபாநாயகர்
இந்த நிலையில் அவிநாசி தொகுதியின் எம்எல்ஏவாக இருந்து வரும் தனபாலுக்கு ஏற்கனவே தொகுதி மக்களிடம் அதிருப்தி நிலவி வருகிறது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு சபாநாயகராக இருந்தார், அதனால் அவர் தொகுதி பக்கமே வராமல் சென்னையில் தங்கியிருந்தார்.
அத்திக்கடவு- அவிநாசி
ஆனால் தற்போது தனபால் தொகுதி பக்கம் வராமல் இருப்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதோடு சரி. அதன் பிறகு தொகுதி பக்கமே வரவில்லை.
10 ஆண்டுகளாக எமர்ஜென்சி பிரிவில் இல்லை
சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவிநாசியில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு இல்லை. இதற்கெல்லாம் தனபால் தீர்வு காணவே இல்லை.
இந்த நிலையில்தான் வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலைவிட்டு ஒதுங்கி மகனை அவிநாசி தொகுதியில் நிறுத்த தனபால் முடிவு செய்திருந்தார் என்கிறார்கள். இதனால்தான் லோகேஷும் விருப்பமனுவை வாங்கியிருந்தார். ஒரு வேளை அவிநாசி தொகுதியில் லோகேஷுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது என தலைமை முடிவு செய்திருந்ததோ என்னவோ தெரியவில்லை.
தவெகவிற்கு தாவினாரா
இதை அறிந்து கொண்டு லோகேஷ் தவெகவிற்கு தாவினாரா என்றும் தெரியவில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவை விட வாக்குகள் குறைந்து 3ஆவது இடத்திற்கு லோகேஷ் தள்ளப்பட்டதால் இந்த முறை அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கலாம். இல்லாவிட்டால் வேறொரு சீனியருக்கு கொடுக்கிறாரோ என்னவோ! காத்திருந்து சீட் கிடைக்காததற்கு கவுரவமாக வெளியேறிவிடலாம் என நினைத்து லோகேஷ் அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
-
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்!











Click it and Unblock the Notifications