சரியாக போட்டிக்கு முன்.. தோனி ஏன் இப்படி பண்ணனும்.. இந்த சீசனில் இப்படி நடந்ததே இல்லையே.. ஷாக்கிங்!
சென்னை: குஜராத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி செய்த காரியம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரில் சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் இதுவரை ஒரு முறை கூட தோனி பயிற்சிக்கு செல்லாமல் இருந்தது இல்லை.

தொடரில் முதல் போட்டிக்கு முன்பே தோனிக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அன்றும் கூட தோனி பயிற்சி செய்தார். ஆனால் ஆச்சர்யமாக நேற்று அவர் பயிற்சிக்கு செல்லவில்லை.
இன்றும் கூட சில நிமிடங்கள்தான் வார்ம் அப் மட்டும் செய்தார். நேற்று சிஎஸ்கே அணியின் வாகனம் பயிற்சிக்கு சென்ற போது கூட தோனி இல்லாமல்தான் சென்றது. இந்த சீசனில் அவர் ஒருமுறை கூட இப்படி பயிற்சியை மிஸ் செய்தது இல்லை.
சரியாக குஜராத் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி இப்படி பயிற்சி செய்யாமல் போனது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏன் பயிற்சிக்கு செல்லவில்லை என்று பெரிய குழப்பம் ஏற்பட்டது.

டீம் மீட்டிங்? :
இது தொடர்பாக சிஎஸ்கே வட்டாரத்தில் விசாரித்ததில் அவர்கள் நம்மிடம் சில முக்கிய தகவல்களை வழங்கினர். அதில், சிஎஸ்கே அணி சார்பாக நேற்று மேனேஜ்மெண்ட் மீட்டிங் நடந்தது. இதில் தோனி கலந்து கொண்டார்.
தோனியின் ஓய்வு, சிஎஸ்கே எதிர்காலம், அடுத்த கேப்டன், பைனல்ஸ போட்டிக்கான பிளான் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் தோனி கலந்து கொண்டதால் அவரால் பயிற்சிக்கு வர முடியவில்லை. அதோடு அவருக்கு முட்டியில் ஏற்பட்டு உள்ள காயம் மோசமாக உள்ளது.
அவரால் வேகமாக ஓட முடியாது. எனவே அவர் பயிற்சி எடுத்து இறுதிப்போட்டிக்கு முன் காயத்தை மோசக்கிக்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐபிஎல் 2023 திருவிழா இன்று முடிவிற்கு வருகிறது. பல திருப்பங்கள், எதிர்பாராத வெற்றிகள், தோல்விகள் என்று பரபரப்பான மாற்றங்களுடன் இந்த தொடர் நடந்து முடிந்துள்ளது.

இன்று நடக்கும் இறுதிபோட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. குஜராத் இடையே இதுவரை 3 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. கடைசியாக குவாலிபயர் சுற்றில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை வீழ்த்தியது.
முன்னதாக இந்த சீஸனின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே தோல்வி அடைந்தது. தற்போது அதே குஜராத் மைதானத்தில் சிஎஸ்கே அணி குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இது ஹோம் மைதானம் என்பதால் சிஎஸ்கே அணிக்கு பிட்ச் எதிராக இருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த பிட்ச் குஜராத் அணிக்கு சாதகமான பிட்ச். சென்னை பிட்ச் போல இது ஸ்லோவாக இருக்காது. அதனால் இன்று நடக்கும் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று குஜராத் அணிக்கு எதிராக . சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், பத்திரனா, துஷார் தேஷ் பாண்டே, மகேஷ் தீக்ஷனா ஆகியோர் ஆட உள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications