புரியாத புதிர்! வடசென்னையை திணிக்கும் அதிமுக.. மறுக்கும் தேமுதிக.. "அவர்" லேசில் விடமாட்டாரே!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு வடசென்னை தொகுதியை கொடுக்க அதிமுக முன்வந்த நிலையில் அதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ஏற்க மறுத்துள்ளார்.
வடசென்னை தொகுதி அதிமுகவின் ஸ்டிராங் தொகுதி, அதை தேமுதிகவிடம், அதிமுக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை என்னென்ன நடக்க போகிறதோ தெரியவில்லை.

அதிமுகவும் தேமுதிகவும் ஏற்கெனவே இரு முறை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. அதாவது கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஒரு முறையும், அடுத்து மார்ச் 6-ஆம் தேதியும் நடத்தியிருந்தன. தேமுதிகவின் டிமான்டே மாநிலங்களவை சீட்டுதான்! ஆனால் அதை அதிமுக கொடுக்க மறுக்கிறது.
66 எம்எல்ஏக்கள்: காரணம் 66 எம்எல்ஏக்களை கொண்ட அதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தான் கிடைக்கும். அதை தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டால் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்படும். தனக்கு மிஞ்சிதான் தானமே என்ற யதார்த்தத்தை அதிமுக கடைபிடிக்க பார்க்கிறது. இதனால் ரூட்டை பாஜக பக்கம் திருப்பியது தேமுதிக!
அங்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அதிமுகவாவது தங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி ராஜ்யசபா சீட் தர மறுத்தது. ஆனால் பாஜகவோ தேமுதிகவுக்கு அக்னிபரீட்சை வைத்தது. அதன்படி தேமுதிக, மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியிலாவது சொந்த தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என்ற நிபந்தனையை பாஜக வைத்துள்ளது.
பாஜகவுடன் எந்த பேச்சுவார்த்தை: இதனிடையே பாஜகவுடன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என பிரேமலதா கூறியிருந்ததை அடுத்து, நேற்றைய தினம் தேமுதிகவை, அதிமுக பேச்சுவார்த்தை நடத்த அழைத்தது. இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு தேமுதிக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மக்களவை தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாம். இதை தேமுதிகவிடமும் தெரிவித்ததாம். ஆனால் தேமுதிக வடசென்னையை பெற மறுத்துள்ளது. அதற்கு பதில் வேறு தொகுதி வேண்டும் என கேட்கிறார்களாம்.
ஜெயக்குமார்: இதில் இரு விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதலில் வடசென்னை தொகுதி என்பது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பரிட்சயமான தொகுதி! அவருடைய மகனுக்கு வடசென்னையை, ஜெயக்குமார் கேட்டு வருகிறார். கடந்த ஆண்டு 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயவர்த்தன் தென் சென்னையில் போட்டியிட்டு வென்றார்.
அதே தொகுதியில் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்த்தனும் போட்டியிட்டனர். இதில் தமிழச்சி வென்றார். இந்த நிலையில் இந்த முறை ஜெயவர்த்தன், தனக்கு பரீட்சயமான வடசென்னையில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே வடசென்னையில் எப்படி அதிமுக, தேமுதிகவுக்கு விட்டு கொடுக்க முடிவு செய்தது என தெரியவில்லை.
தேர்தல் தோல்வி: இதற்கு ஜெயக்குமார் எப்படி ஒப்புக் கொள்வார். ஒரு வேளை கடந்த தேர்தல் தோல்வியை கருத்தில் கொண்டு வடசென்னையை தேமுதிக கொடுத்தாலும் வாங்காது என்பதற்காக அதிமுக திணிக்கிறதா என்றும் தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்கட்டும்.
வடசென்னையை தேமுதிக ஏன் வேண்டாம் என்கிறது என்பதை பார்க்கலாம். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு வடசென்னையை அதிமுக ஒதுக்கியது. அப்போது உடல் நிலை சரியில்லாவிட்டாலும் விஜயகாந்த் கூட வடசென்னைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார். அந்த தேர்தலில் தேமுதிக சார்பில் மோகன்ராஜ் என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவின் கலாநிதி வீராசாமி போ்டியிட்டார்.
கலாநிதி வென்றார்: இந்த தேர்தலில் கலாநிதி வென்றார். தேமுதிக வேட்பாளரை காட்டிலும் கலாநிதி 5 மடங்கு வாக்குகளை குவித்தார். எனவே இந்த தேர்தலில் அடைந்த தோல்வியை வைத்து வடசென்னை வேண்டாம் என தேமுதிக கருதுகிறதா என தெரியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications