Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோபம் அடங்காத ஸ்டாலின்.. அமைச்சர் பதவியிலிருந்து பொன்முடி ராஜினாமா.. நடந்தது என்ன? பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகளை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா செய்து உள்ளனர். செந்தில் பாலாஜியின் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் ஆர் எஸ் ராஜகண்ணப்பன் பொன்முடியிடம் இருந்த வனத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சராக மனோ தங்கராஜும் பதவி ஏற்க உள்ளார். இதில் பொன்முடி பதவி பறிப்பிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

ஏற்கனவே பொன்முடியின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டு உள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்படுவதாக கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு ஒரு வாரத்தில் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் கூட்டம் ஒன்றில் அமைச்சர் பொன்முடி பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வைத்து இருந்தார். அவரின் பேச்சு கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சில், ஒரு விலைமாது வீட்டிற்கு போகிறான்.. அங்கு போகும் போது ஒரு பெண், நீங்கள் சைவமா, வைணவமா? என்று கேட்கிறார். அது அந்த பையனுக்கு புரியவில்லை.. விலைமாது வீட்டில் சைவமா, வைணவமா என்று கேட்கிறார்கள் என்று குழம்புகிறார். இவ்வாறு பேசிய பொன்முடி சைவமென்றால் பட்டை, வைணவம் என்றால் நாமம் என்று மேடையில் செய்து காட்டினார்.

Why did DMK Chief Stalin took action against Ponmudi and removed his cabinet post also now

அதுமட்டுமல்லாமல் சைவம், வைணவம் என்றால் என்ன என்பதற்கு மோசமான ஒப்புமையும் அளித்தார். இதனால் அவர் பேச்சு சர்ச்சையாகியது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்கள் குறித்தும், சமூகங்கள் குறித்தும் பேசியது சர்ச்சையாகியது. இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழியும் அமைச்சர் பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்

அதில், அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியை கட்சி பொறுப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீக்கி அறிவித்தார்.

ஸ்டாலின் நடவடிக்கை

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்படுவதாக கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவருக்கு பதிலாக திருச்சி சிவா அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு பதிலாக கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மிக மிக இக்கட்டான நேரத்தில் மட்டுமே பொதுச்செயலாளருக்கு பதிலாக கட்சி தலைவர் இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவார். பொதுச்செயலாளர் அறிவிப்பிற்கு காத்திருக்காமல் தலைவர் ஸ்டாலின் உடனடியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதற்கு காரணம் ஸ்டாலினின் கோபமாக இருக்கலாம். ஸ்டாலின் இந்த பேச்சால் நேரடியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம். முக்கியமாக இதற்கு முன்பே பொன்முடி நிறைய முறை தவறாக பேசி உள்ளார். முக்கியமாக பெண்கள் இலவச பேருந்துகளை.. ஓசி பேருந்து என்று கூறி உள்ளார்.

இதற்கு முன்பே மனு கொடுக்க வந்த பெண்ணிடம் சாதியை சுட்டிக் காட்டிப் பேசியது பெரிய சர்ச்சையானது. அப்போதே முதல்வர் ஸ்டாலின் இது போன்ற பேச்சுக்களை சுட்டிக்காட்டி பேசினார். "திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதல்வராகவும் மத்தளத்துக்கு 2 பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ - மூத்தவர்களோ - அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பை பாருங்கள். உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் - உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பொது நன்மைக்காக மட்டுமே இதனை நான் சொல்லவில்லை, உங்களது நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது என்று நொந்துபோய் பேசியிருந்தார்.

இப்படி பல முறை பேசியும் மூத்த தலைவர்கள் சிலர் அதை கேட்கவில்லை. இப்போது இனிமேல் இப்படி பேசுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று உணர்த்தும் விதமாக பொன்முடியின் அமைச்சர் பதவியும் நீக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+