ஓஹோ.. இதான் மேட்டரா.. கு.க. செல்வம் திமுகவுக்கு மீண்டும் ஏன் போனார் தெரியுமா.. அனலடிக்கும் அறிவாலயம்
ஏன் குக செல்வம் திமுகவில் இணைந்தார் என்ற காரணம் கசிந்து வருகிறது
சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார் குக செல்வம்.. இந்த நிகழ்வுதான் திமுகவில் இன்னமும் வைரலாக சுற்றி சுற்றி வருகிறது.
குக செல்வத்தை பொறுத்தவரை திமுகவில் சீனியர்.. கட்சி மேலிடத்துக்கு நெருக்கமானவர்.. திடீரென கட்சியில் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது.. அதற்கு உதயநிதியை காரணம் காட்டினார் கு.க.செல்வம்..
ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதியை நிறுத்தப் போவதாக தெரிகிறது.. கட்சியில் எனக்கு முக்கியத்துவம் இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.

உதயநிதி
கட்சியில் இருந்து விலகினார்.. "பதவி கேட்டேன்.. கொடுக்கவில்லை. போய் விட்டேன்" என்று ஓபனாகவே காரணமும் சொன்னார். ஆனால் திமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய பிறகு குக செல்வம் சொன்ன காரணங்கள் வலுவிழந்துவிட்டன.. அவர் சொன்னதைபோல, ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி நிறுத்தப்படவில்லை, மாறாக டாக்டர் எழிலன் நிறுத்தப்பட்டார்..

டாக்டர் எழிலன்
இன்னொரு காரணம், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலமாக அப்போது காய் நகர்த்த தொடங்கினாராம் டாக்டர் எழிலன்... இன்னொரு பக்கம் திமுகவின் போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஜின்னா, உதயநிதி மூலம் தனக்கு சீட் தர வேண்டும் என்று காய் நகர்த்தினாராம்.. இதனால், யாருக்கு சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்தான், சபரீசன் "சாய்ஸ்" ஓகே ஆகியுள்ளது. மற்றபடி குக செல்வம் சொன்னதைபோல ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி நிறுத்தப்படவே இல்லை.. அந்த பேச்சும் வரவில்லை.

ராதாரவி
அதேசமயம் பாஜகவை மலை போல் நம்பிக் கொண்டு போனார் செல்வம்.. இதற்கு முன்பு அதிமுகவிலிருந்து பாஜகவுக்குப் போய் பெரிய லெவலில் பதவி, அங்கீகாரம், தேர்தலில் நிற்க சீட் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்தில் பலர் அங்கு மூழ்கிப் போய் கிடந்தனர்.. அவ்வளவு ஏன், அந்த சமயம் நயினார் நாகேந்திரன் கூட புலம்பியிருந்தார்... அவருக்கு முன்பு நடிகர் ராதாரவியும் கூட அதிருப்தியைக் காட்டியிருந்தார்.

கேள்விகள்?
ஓரளவு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள இவர்களுக்கே இந்த நிலை என்றால் ஆயிரம் விளக்கு தொகுதியைத் தாண்டி யாருக்குமே தெரியாத ஒரு நபரை எப்படி பாஜக பெரிய அளவில் உட்காரவைக்கும் என்று அப்போதே அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.. எந்தவித பெரிய பொறுப்பையும் பாஜக மேலிடம் செல்வத்துக்கு தராத நிலையில், அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் பரிச்சயம் வாய்ந்த செல்வத்தை போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அதுவும் நடக்கவில்லை.. இதற்கு காரணமும் தெரியவில்லை..

நயினார் நாகேந்திரன்
செல்வத்துக்கு வாய்ப்பு தந்திருந்தால், நிச்சயம் ஆயிரம் விளக்கை மீண்டும் தன் பிடியில் வைத்திருந்திருப்பார். ஆனால், சம்பந்தமே இல்லாமல் குஷ்புவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.. அப்போதே குக செல்வம் சற்று அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. குஷ்புவும் சரி, எழிலனும் சரி, இருவருக்குமே அது முதல் தேர்தல்.. எனினும், உதயநிதியை கையை காட்டிட்டு குக செல்வம், கட்சி தாவிய நிலையில், அவருக்கு ஏன் ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது தெரியவில்லை... இத்தனை மாத காலமும் விரக்தியில் இருந்த செல்வம், மீண்டும் திமுகவில் வந்து இணைந்துள்ளார்..

செல்வம் பேட்டி
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டத்துக்கு நிதி ஒதுக்காததைக் கண்டித்தும் நீட் தேர்வுக்கு விலக்கு தராததை கண்டித்தும், ஜி.எஸ்,டி. நிலுவைத் தொகை வழங்காததைக் கண்டித்தும், ஆளுநரை மாற்றாததைக் கண்டித்தும், தமிழகத்தை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பதைக் கண்டித்தும், மதமோதல்களை ஏற்படுத்துவதைக் கண்டித்தும் நான் பாஜகவிலிருந்து விலகி தாய்க் கழகத்துக்கு வந்துவிட்டேன் என்று செல்வம் காரணம் சொல்லி உள்ளார்.

காரணங்கள்
ஆனாலும் வேறு 2 காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றன.. மிகப்பெரிய பொறுப்பு, பதவி திமுகவில் எதுவும் தரப்படாத நிலையில்தான், அதிருப்தியால் பாஜகவுக்கு தாவினார் செல்வம்.. ஆனால் அங்கேயும் எந்த வித பொறுப்பும் தரப்படவில்லை, பெரிதாக செயல்படவும் முடியாமல் ஒதுங்கியே இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படவும்தான் திமுக பக்கம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்..

திமுக விட்டுவிடாது
திமுக ஆட்சி எப்படியும் 5 வருட காலத்துக்கு இருக்க போகிறது, எப்படியும் எம்பி தேர்தலிலும் மகத்தான வெற்றியை ஈட்டக்கூடும்.. மக்களிடம் தொடர்ந்து திமுக நன்மதிப்பை பெற்றும் வருகிறது.. மற்றொரு பக்கம் அதிமுக, பாஜக மீதான அதிருப்திகளும் கூடிக் கொண்டு வருகின்றது.. எனவேதான், செல்வம் திமுகவில மீண்டும் ஐக்கியமானதாக கூறுகிறார்கள்.. எது எப்படியோ, பிற கட்சியில் இருந்து வந்தவர்களையே வரவேற்று பதவி தந்து அழகு பார்த்து வருகிறது திமுக.. அப்படி இருக்கும்போது சீனியர் செல்வத்தை அவ்வளவு லேசில் விட்டுவிடாது.. பார்ப்போம்..!
-
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications