பிடிஆர் வந்துட்டாரு.. என்னென்னமோ சொன்னாங்களே.. பாய்ந்த அம்புகளை பிடுங்கியெறிந்து.. மலைத்த மதுரை
சென்னை: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆரை, திமுக மேலிடம் கண்டுகொள்ளவில்லை, அவ்வளவாக முக்கியத்துவம் தரவில்லை என்கிற யூகங்கள் றெக்கை கட்டி தொடர்ந்து பறந்துவரும்நிலையில், மதுரை மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் பிடிஆர்.. என்ன நடந்தது?
பாஜகவின் முதல்குறியே பிடிஆர் என்று சொல்லப்படும் அளவுக்கு, தேசிய தலைவர்களையே கலங்கடித்தவர் முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர்.. அதனால்தானோ, என்னவோ, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், முதல்வரின் மருமகன் சபரீசன் குறித்தும் பிடிஆர் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ உண்மையிலேயே திமுகவை, ஒரு புரட்டு புரட்டுவிட்டு போனது.

ஆடியோ விவகாரம்: அந்த ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் கிடையாது என்று பிடிஆர் விளக்கம் தந்தார்.. அதேசமயம் அவர் ஏன் போலீஸில் புகார் எதுவும் தரவில்லை என்ற சந்தேகங்களும் வலம்வரத்தான் செய்தன.
மற்றொருபக்கம், இந்த ஆடியோ விவகாரம், திமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை தந்திருந்தால், எப்படியும் அமைச்சரவையில் இருந்து பிடிஆர் நீக்கப்படுவார் என்ற பேச்சுகள் வட்டமடித்தன..ஆனால், அவரது துறை மட்டும் பறிக்கப்பட்டது...
நிதியமைச்சர்: பிடிஆர் தியாகராஜன், நிதி அமைச்சராக இருந்தார்.. பாவம் அவர்.. இப்போ ஏதோ ஒன்றை கொடுத்து டம்மி பண்ணிடாங்க'' என்று மூத்த தலைவர் செல்லூர் ராஜூ உட்பட பலரும் அப்போது குத்திக்காட்டி பேசியதை மறுக்க முடியாது.. தகவல் தொழில்நுட்பத்துறையை பிடிஆருக்கு தந்தாலும்கூட, பிடிஆர் அதற்கு பிறகு, கட்சியின் பெரிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது.
அதுமட்டுமல்ல, மதுரை அண்ணாநகர் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், மதுரை திமுக மாவட்டச் செயலாளர் தளபதி தலைமையில் அப்போது நடந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர், மதுரை மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால், இந்த கூட்டத்தில் எல்லாரும் பேசிய போதிலும், பிடிஆரை மட்டும், பேசுமாறு யாரும் அழைக்கவில்லையாம்.
கொந்தளிப்பு: இதனால் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துகொண்டு பிடிஆர் அங்கிருந்து வெளியேறியதாகவும், இதனால் பிடிஆரின் ஆதரவாளர்கள் கொதித்துவிட்டதாகவும், பிடிஆரை தேவையில்லாமல் அவமானப்படுத்துகிறார்கள், ஓரங்கட்டுகிறார்கள் என்றெல்லாம், அவரது ஆதரவாளர்கள் வேதனைப்படுவதாகவும் செய்திகள் கசிந்தன. ஆக, நிதியமைச்சராக இருந்தபோதும்சரி, இல்லாதபோதும் சரி, பிடிஆர் மீதான பரபரப்புகள் பஞ்சமே இல்லாமல் அரசியல் களத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.
ஆனால், பிடிஆரோ, எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.. எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ளவுமில்லை.. மாறாக, தன்னுடைய தொகுதியில் முழுமூச்சாக களப்பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.
ஆம்.. தான் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களை வீடு, வீடாக சந்தித்து கடந்த 6 மாத காலத்துக்கான தன்னுடைய செயல்பாட்டு அறிக்கையை, பழனிவேல் தியாகராஜன் வழங்கி வருகிறார்.. மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் கடந்த 6 மாத காலத்துக்கான தமது செயல்பாட்டு அறிக்கையை முதல்கட்டமாக இன்று வழங்கியுள்ளார்.
சபாஷ் பணிகள்: கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடைய தொகுதி மக்களிடம் சில வாக்குறுதிகளை பிடிஆர் அளித்திருந்தார்.. அந்த வாக்குறுதியின்படி, சட்டமன்ற உறுப்பினராக தன்னுடைய செயல்பாட்டை ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வருகிறார்.
அந்தவகையில்தான், இன்று மதுரை சிம்மக்கல் அண்ணாமலை திரை அரங்கம் அருகே திருமலைராயர் படித்துறை, எல்என்பி அக்ரஹாரம், தைக்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த செப்டம்பர் 2022 முதல் மே 2023 உள்ளிட்ட 6 மாதத்திற்கான செயல்பாட்டு அறிக்கையை வீதி வீதியாகவும், வீடு வீடாகவும் சென்று தொகுதி மக்களை நேரில் சந்தித்து வழங்கினார்...
அதிரடி நடவடிக்கைகள்: அத்துடன், தொகுதி மக்களுக்கு என்னென்ன குறைகள் உள்ளன? கோரிக்கைகள் இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டறிந்தார்.. விமர்சனங்களும், சர்ச்சைகளும், பரபரப்புகளும் றெக்கை கட்டி பறந்தாலும், தன்னுடைய கடமையை சரியாகவும், அதேசமயம் கூலாகவும் செய்து, தொகுதி மக்களிடம் நெருங்கியே வருகிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications