அமித் ஷாவை பார்க்க.. அப்போ கார் மாறி மாறி போன எடப்பாடி.. இப்போது முகத்தை சட்டென மூடி.. என்ன காரணம்?
சென்னை: நேற்று உள்துறை அமைச்சர், பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வெளியே வரும் போது கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அவரின் இந்த செயல் கடுமையான விவாதங்களை, விமர்சனங்களை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி ஏன் இப்படி செய்தார் என்ற கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
இதற்கு முன்பே ஒரு முறை அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன் சென்றார். அதன் புகைப்படங்கள் வெளியாகவில்லை. ஆனால் அப்போது அவர் கார் மாறி மாறி சென்றார். இந்த புகாரை முதல்வர் ஸ்டாலினே வைத்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமி கார் மாறி மாறி செல்கிறார் என்று புகார் வைக்கப்பட்டது. இப்போது அவர் மாஸ்க் போடுகிறார் என்று புகார் வைக்கப்பட்டு உள்ளது.
நேற்று தன்னுடன் வந்த மூத்த நிர்வாகிகளை முன்கூட்டியே தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு, தனியாக அமித்ஷா உடன் ஆலோசனையும் நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் நடந்த சில சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. நேற்று அமித்ஷாவை சந்திக்க டெல்லி போலீசாரின் 2 பாதுகாப்பு வாகனத்துடன் எடப்பாடி பழனிசாமி உள்ளே சென்றார்.
எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு பயணம்
முதலில் அதிமுக மூத்த நிர்வாகிகள் உடன் 10 நிமிடங்கள் அமித்ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. பின்னர், நிர்வாகிகள் மட்டும் அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்தனர். எடப்பாடி பழனிசாமியும் வெளியே சென்றதாக தெரியப்படுத்த டெல்லி போலீசார் வாகனமும் அவர்களுடன் விடுதிக்குச் சென்றது.
பிறகு, ஹிந்தி மற்றும் தமிழ் தெரிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் கொண்டு அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். ஆலோசனை முடிந்து போலீஸ் பாதுகாப்பு எதுவும் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி காரில் கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே வெளியேறி விடுதிக்குச் சென்றார்.
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷாவை சந்தித்துவிட்டு சென்றதை அதிகாரபூர்வமாக அறிவிக்க எடப்பாடி விரும்பவில்லை. அதிமுக அரசியல் விவகாரத்தில் இப்போது பாஜக தலையீடு இருக்கிறது என்பதை காட்ட எடப்பாடி விரும்பவில்லை. அதாவது அதிமுக உட்கட்சி மோதலில் அமித் ஷா இப்போது பவர் கொண்டவராக இருக்கிறார். இப்போது எடப்பாடி அமித் ஷாவை சந்திக்க வேறு காரணமே இல்லை. ஒரே காரணம் செங்கோட்டையன் விவகாரம் மட்டுமே. அப்படி இருக்க அதில் அமித் ஷா தலையீடு உள்ளது என்பதை நிரூபிக்கும் சந்திப்பாக இது அமைந்து விடும்.
அவரைக்கு போய் சந்தித்தால்தான் பிரச்சனை தீரும் என்று எடப்பாடி காட்ட விரும்பவில்லை. அப்படி காட்டினால் அது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அரசியல் பிரச்சனையாக இருக்கும். அதோடு எடப்பாடிக்கு பவர் இல்லை என்ற பிம்பம் ஏற்படும். அதோடு அதிமுக உட்கட்சி மோதலில் அமித் ஷா இப்போது பவர் கொண்டவராக இருக்கிறார் என்ற பிம்பம் ஏற்படும்.
இதை எடப்பாடி விரும்பவில்லை. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு பயணம் செய்தார் என்று கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக தனக்கு இது பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்பதால் அவர் கர்ச்சீப் வைத்து மூடிக்கொண்டதாக கூறப்படுகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications