ஓவராக ஆடுகிறார்.. ஓபிஎஸ் அஸ்திவாரத்தை அசைக்க முடிவெடுத்த எடப்பாடி.. அப்படியே நொறுங்குதே.. பின்னணி
சென்னை; அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் இந்த மனுவிற்கு முக்கிய காரணம் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் நடக்கும் உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த உட்கட்சி மோதலில் இதுவரை எடப்பாடி பழனிசாமிதான் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வந்துள்ளார். அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையே உள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதே நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அதாவது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிமுக தேர்தல் குழு நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஆனால் அதிமுகவின் பொதுக்குழு முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகளையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தேர்தல் ஆணையம் இப்போது ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கலாம். தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணைய முடிவுகள் தன்னிச்சையானது. உச்ச நீதிமன்ற முடிவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தாலும், அதை எதிர்த்து வழக்கு போடுவது பெரிதாக பலன் அளிக்காது.

இதற்கு முன்பே தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்ட வரலாறுகள் உள்ளன. எனவே பொதுக்குழு வழக்கில் வந்த தீர்ப்பு என்பது எடப்பாடி ஒரு ப்ளஸ் பாயிண்ட். அதாவது பாருங்க உச்ச நீதிமன்றம் எங்க வாதத்தை ஏற்றுக்கொண்டது.. நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வெற்றிபெறும் தரப்பு தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கோரிக்கை வைக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான்.
இப்போது வரை தேர்தல் ஆணைய ஆவணத்தில் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர். ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலுடன் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மனு அளித்து உள்ளனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்து இந்திய தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் மனு அளித்து உள்ளனர்.
ஆனால் இதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அடிப்படை தொண்டர்கள் மூலமும் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். அப்படி இருக்கும் போது அதை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வம் தன்னை இப்போதும் அதிமுக என்று கூறி வருகிறார். சட்டசபையிலும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் இருக்கிறார். தேர்தல் ஆணையம் இதில் முடிவு எடுக்கவில்லை என்று சபாநாயகர் அப்பாவுவும் இவர் இருக்கையை மாற்றவில்லை.

ஒபிஎஸ்ஸுக்கு இருக்கும் இந்த ஒரே ஒரு கதவையும் மொத்தமாக அடைத்து மூட முடிவு செய்து இருக்கிறார் எடப்பாடி. அவருக்கு ஆதரவாக தேர்தல் ஆணைய ஆவணங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அதையும் காலி செய்ய முடிவு செய்துள்ளார் எடப்பாடி. இதை மனதில் வைத்தே அதிமுகவின் பொதுச்செயலாளராக தான் தேர்வு செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும், பொதுக்குழு முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.
இதில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் விரைவில் ஓ பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி பறிபோகும் நிலை ஏற்படும்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications