அண்ணாமலையை பொருட்டா மதிக்காதீங்க! கர்நாடக தேர்தலுக்கு பின் கேம் ஓவர்? கூட்டத்தில் கர்ஜித்த எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலைக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும் கட்டம் கட்டப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரின் பெயரை குறிப்பிடாமல் சொன்னதாக கூறப்படுகிறது.

நேற்று அதிமுக செயற்குழு நடந்தது. எடப்பாடி தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில் பாஜக உள்ளிட்ட எந்த கட்சி பற்றியும் விவாதிக்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

 Why did Edappadi Palanisamy say about Annamalai and Why he is so angry on him?

திமுகவை பற்றி கூட 2 முறை நீண்ட விவாதம் நடந்து இருக்கிறது. பல்வேறு பிரச்சனைகளில் திமுக அரசை கண்டிக்கும் தீர்மானங்கள் உட்பட 15 தீர்மானங்களை நிறைவேற்றினார்.

இந்த கூட்டத்தில் அண்ணாமலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை என்று ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம். அண்ணாமலை பெயரை ஒருவர் கூட பேச்சுக்கு கூட இந்த கூட்டத்தில் பேசவில்லை என்று குறிப்பிட்டு இருந்தோம்.

இந்த நிலையில்தான் செயற்குழு கூட்டம் முடிந்ததும் எடப்பாடியை சந்தித்து முக்கிய உறுப்பினர்கள் பலரும் பேசினர். அப்போதுதான் அண்ணாமலை பற்றிய பேச்சும் வந்து இருக்கிறது. அண்ணாமலையை பற்றி சிலபல கேள்விகளை கேட்டுள்ளனர் உறுப்பினர்கள்.

அதாவது கூட்டம் முடிந்து வெளியே நடந்த பேச்சு வார்த்தையில் இதை விவாதித்து உள்ளனர். அப்போது, "அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காதீர்கள். அந்த நபரை புறக்கணிக்க பழகிக் கொள்ளுங்கள். நம்பிக்கைக்கு உரியவராகவும் அவர் இல்லை.

நம்பகத்தன்மை உள்ளவராகவும் இல்லை. நம் கழகத்துக்கு அந்த நபரெல்லாம் சாதாரணம். நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தலைவர் பதவியில் இருக்க மாட்டார். கர்நாடாக தேர்தல் முடிந்ததுமே கூட அவர் கட்டம் கட்டப்படலாம் " என்று அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தாராம் எடப்பாடி பழனிச்சாமி.

தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் - பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது.

சமீபத்தில் திமுகவின் சொத்து பட்டியல் என்று சில விவரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில் அதிமுகவிற்கு எதிராகவும் சில விஷயங்களை அண்ணாமலை பேசினார்.

அதாவது அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாக மறைமுகமாக கருத்து சொன்னார். அதில், ஊழல் லிஸ்ட் பார்ட் 1னுடன் முடியாது. தமிழ்நாட்டில் எந்த கட்சி எல்லாம் இதுவரை ஆட்சி செய்து இருக்கிறதோ அந்த கட்சி எல்லாம் பற்றி பேசுவோம். அத்தனை கட்சிகளின் ஊழல் பற்றியும் பேசுவோம், என்று கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி, அண்ணாமலை பற்றி என்னிடம் கேட்காதீங்க. அவரை பற்றி என்னிடம் பேச வேண்டாம்.

முதிர்ந்த அரசியல்வாதிகளைப் பற்றி கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன். அவர் இப்படி பேசி பேசித்தான் பிரபலம் ஆகி உள்ளார். அவர் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகி உள்ளார்.

அவர் ஊழல் பட்டியலை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. சொத்து பட்டியலை வெளியிட்டதாகவே தெரிகிறது என்று எடப்பாடி கூறினார்.

அதன்பின் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், , அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை வெறும் 2 ஆண்டுகள் தான். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி.

எடப்பாடி கூறியதை போல அவர் ஒரு முதிர்ச்சியில்லாத தலைவர். அண்ணாமலையை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று ஜெயக்குமார் கூறினார்.

இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும் கட்டம் கட்டப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரின் பெயரை குறிப்பிடாமல் சொன்னதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+