மின்சாரம்.. அந்த வித்தியாசம் இருந்தால் அபராதம்.. ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி முடிவு
சென்னை: காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக மின்சாரம் கிடைக்கும் என, தெரிவித்து விட்டு, குறைவாக வழங்கினால், ஒரு யூனிட்டிற்கு, 5 காசு வரை அபராதம் விதிக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம் ஆகியவற்றுக்கு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் வல்லூர், கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல்மின் நிலையங்கள் உள்ளன .இதுதவிர தமிழக அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களும் உள்ளன. இது தவிர தனியார் நிறுவனங்களுக்கும் அனல், எரிவாயு, காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன.

மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்துக்கு கோடை காலங்களில் தினசரி 6,972 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டது.பொதுவாக தமிழகத்திற்கு தினமும் சராசரியாக 5 ஆயிரம் முதல் 5,500 மெகாவாட் வரை மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஆனாலும் தமிழக மின் வாரியத்திற்கு மின்சாரம் போதவில்லை. மின் வாரியத்தின் கீழ் செயல்படும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தான் தற்போது தமிழகம் முழுவதும் அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும், அதை பூர்த்தி செய்ய தேவையான மின் உற்பத்தி, மின் கொள்முதல் போன்ற பணிகள செய்கிறது.
தற்போதைய நிலையில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் இயற்கையாக கிடைத்தாலும், இந்த மின்சாரம் நாள் முழுவதும் நிலையாக தொடர்ந்து ஒரே மாதிரியாக கிடைப்பது இல்லை. இதனால் சில நேரங்களில் பற்றாக்குறை ஏற்படும் போது சிக்கல் ஏற்படுகிறது.
அதேநேரம் காற்றாலை, சூரிய மின்சக்தி ஆகிய இரு வகை மின்சாரமும் வழங்க, மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் நிறுவனங்கள், அடுத்த, 24 மணி நேரத்திற்கு ஒவ்வொரு, 15 நிமிடத்திற்கும் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை கூற வேண்டும்.. அதுவும் 96 பகுதிகளாக பிரித்து, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கு, முந்தைய நாளே மின்சாரம் எவ்வளவு கிடைக்கும் என்பதை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் இன்று அதிக அதிக மின்சாரம் கிடைக்கும் என, தெரிவித்து விட்டு, குறைவாக வழங்கினால், மின் தேவையை பூர்த்தி செய்வதில் மின் வாரியத்திற்கு சிரமம் ஏற்படுவதுடன், வெளிச்சந்தையில் சட்டென மின்சாரம் வாங்க வேண்டிய காரணத்தால் மின் வழித்தடங்களிலும் பாதிப்பும் ஏற்படுகிறது.
எனவே, முன்கூட்டியே தெரிவித்த அளவை விட மின்சாரம் வழங்குவதில், 15 சதவீதத்திற்கு மேல் வித்தியாசம் இருந்தால், ஒரு யூனிட்டிற்கு அதிகபட்சம், 5 காசு வரை அபராதம் விதிக்க, ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்திருக்றிது. இதுகுறித்து, வரைவு அறிக்கை வெளியிட்டு, கருத்து தெரிவிக்கவும், ஆலோசனை வழங்கவும் அக்டோபர் 10ம் தேதி வரை அவகாசம் அளித்திருக்கிறது. இந்த அவகாசத்திற்குள் மின் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பதிலை தெரிவிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications