போனால் போகட்டும்.. இரவு அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜியை.. விட்டுப்பிடித்த அமலாக்கத்துறை.. ஏன்?
சென்னை: அமலாக்கத்துறைக்கு நேற்று இரவு செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது. இதையடுத்து நேற்று அவரை அலுவலகத்திற்கு இரவோடு இரவாக கொண்டு சென்றனர்.
நேற்று உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை, ஆகஸ்ட் 12 வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்திருந்தது.

இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி உச்ச நீதிமன்றம், ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து இன்று காலை தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இணையதளத்தில் பதிவேற்றம்: இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் இணையதள நகலை அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை கூட செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
என்ன நடந்தது?: அமலாக்கத்துறைக்கு நேற்று இரவு செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது. இதையடுத்து நேற்று அவரை அலுவலகத்திற்கு இரவோடு இரவாக கொண்டு சென்றனர். மெலிந்த தேகத்துடன், செந்தில் பாலாஜி முகம் முழுக்க தாடியுடன் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டார்.
நேற்று இரவு கிட்டத்தட்ட 9 மணிக்கே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுவிட்டார். அமலாக்கத்துறைக்கு சில மணி நேரம் நேற்று இருந்தும் கூட அவரிடம் விசாரணை எதையும் செய்யவில்லை. மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உணவு வழங்கப்பட்டது.

அதன்பின் அவரை தூங்குவதற்கு அனுமதித்தனர். நேற்று செந்தில் பாலாஜியை விசாரிக்காமல் அமலாக்கத்துறை விட்டுப்பிடித்ததற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. அதன்படி செந்தில் பாலாஜியை சட்டப்படி ஆகஸ்ட் 8- 12ம் தேதி வரை மட்டுமே விசாரிக்க முடியும். இதனால் நேற்று அவரிடம் அமலாக்கத்துறை கேள்விகளை கேட்கவில்லை.
அதோடு செந்தில் பாலாஜி உடல்நிலையை கவனித்துக்கொள்வோம் என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது. அதனால் அவரை நேற்று விசாரிக்காமல் மருத்துவ பரிசோதனைக்கு பின் உறங்க அனுமதித்து உள்ளனர். இதையடுத்து இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை தொடங்கி உள்ளது. புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜியிடம் நேற்று இரவு கேள்விகள் எதுவும் கேட்கப்படாத நிலையில் காலையில் விசாரணை தொடங்கியது. அவரிடம் இன்று 50 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.,












Click it and Unblock the Notifications