தங்கம், வெள்ளிக்கு வந்த வாழ்வு முடிந்துவிட்டதா.. ஆபத்தை நீக்கிய அமெரிக்கா.. நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: சுந்தர் சி நடித்த தலைநகரம் படத்தில் நாய் சேகராக வரும் நடிகர் வடிவேலு ஆபத்தில் ஓபன் பண்ணும் பெட்டியை போல், எல்லாரும் ஓடிப்போய் தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பாக முதலீடாக கருதி தங்கத்தில் எல்லாரும் முதல் வரிசையில் ஓடிப்போய் முதலீடு செய்து லாபம் பார்த்தார்கள். இதனால் தங்கம் விலை ஒரு லட்சத்தை நெருங்கியதால், இதை பார்த்த முதலீட்டாளர்கள் கிடைத்த வரை லாபம் என அப்படியே விற்க தொடங்கியதுடன், மீண்டும் பங்குசந்தை பக்கம் வரதொடங்கியதால், தங்கம் கடுமையாக சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது.
சர்வதேச சந்தையில் இந்த வார தொடக்கத்தில் அவுன்ஸ் ஒன்றுக்கு சுமார் $4,381 ஐத் தொட்ட தங்கம், மற்றும் அவுன்ஸ் ஒன்றுக்கு $54.5 ஐ அடைந்த வெள்ளி ஆகியவை கிட்டத்தட்ட 10% வரை குறைந்துள்ளன. இன்னும் எளிமையாக நம்மூர் நகை மொழியிலும், நம்ம ஊர் பண மதிப்பிலும் கூறுவது என்றால், கடந்த அக்டோபர் 17ம் தேதி ஒரு சவரன் தங்கம் 97600 ரூபாய் ஆக இருந்தது. ஒரு கிராம் 22 காரட் தங்கம் 12200 ரூபாய் என்ற உச்சம் அடைந்தது. ஆனால் அடுத்த நாள் தொடங்கி தற்போது அக்டோபர் 23ம் தேதி வரை படிப்படியாக தங்கம் விலை சரிந்து வருகிறது. தங்கம் விலை இன்று ஒரு சவரன் 92,000 ரூபாய் ஆகி உள்ளது.

ஒரு கிராம் தங்கம் 11,500 ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. தங்கம் விலை எந்த அளவிற்கு சரியும் என்ற கவலை தற்போது முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளது. தங்கம் விலை இப்படி என்றால், வெள்ளி விலை, நினைக்கவே முடியாத அளவிற்கு பாதாளத்திற்கு போய் கொண்டிருக்கிறது. வெள்ளிவிலை கடந்த அக்டோபர் 15ம் தேதி அன்று ஒரு கிலோ 207,000 ரூபாய் ஆக இருந்தது. ஆனால் அக்டோபர் 23ம் தேதியான இன்றைய நிலவரப்படி, 174,000 ரூபாய் ஆக சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 174 ரூபாய் ஆக சரிந்துள்ளது.
இப்படி தங்கம், வெள்ளி விலை சரிவு குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், புவிசார் அரசியல் பதட்டங்கள் குறைந்தது, டாலர் வலுவடைந்ததுள்ளது. மேலும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை நோக்கி அமெரிக்கா நகரலாம் என்ற அறிகுறிகள் தெரிந்துள்ளது. எனவே பழையபடி பங்கு சந்தையிலும், டாலரிலும் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தொடங்கிவிட்டதாக கூறுகிறார்கள்.
திடீர் வீழ்ச்சிக்கு பின்னணியில் உள்ள காரணங்கள்
எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்-ஐ நிறுவிய சுகந்தா சச்தேவா திடீர் வீழ்ச்சிக்கான காரணம் குறித்து கூறுகையில், "முதலீட்டாளர்கள் அண்மையில் ஏற்பட்ட விலை உச்சத்தை பயன்படுத்தி தங்கம், வெள்ளி வாங்கியவர்கள் லாபம் பார்க்க விரும்பி உள்ளார்கள். அது சரிவுக்கு காரணமாக மாறியது. அதேபோல் சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியிருக்க்கிறது. இதுவே தங்கத்தின் பாதுகாப்பான புகலிட மதிப்பை குறைத்திருக்கிறது. அதே நேரத்தில், அமெரிக்க அரசின் பணி முடக்கத்திற்கும் தீர்வு ஏற்படும் நம்பிக்கைகளும் பிறந்துள்ளது, இந்த காரணங்களால் டாலரின் மதிப்பு உயர தொடங்கியது.இதனால் தங்கம் விலை குறைய தொடங்கி உள்ளது.
தங்கம், அவுன்ஸ் ஒன்றுக்கு $43.80 ஐ சந்தித்த பிறகு , இப்போது கிட்டத்தட்ட 10% குறைந்துள்ளது. வெள்ளியும் $54.5 இல் இருந்த நிலையில், தங்கம் போலவே வீழ்ச்சியைக் கண்டுள்ளது . அதேநேரம் சில விஷயங்களால் குறுகிய காலத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரியும் வேகத்தைக் குறைக்கவும் வாய்ப்பு உள்ளது.
"தங்கத்தில், அவுன்ஸ் ஒன்றுக்கு $39.50-$40.00 என்கிற நிலையில் இருக்கிது. 10 கிராமுக்கு சுமார் ₹2,10,000 ஆக இருக்கிறது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹1,25,000-₹1,27,000 என்கிற நிலைக்கு போய் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிலோ ₹1,45,000 க்கு அருகில் வர வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வெள்ளி விலைபு இப்போதைக்கு ₹1,67,000 க்கு அருகில் இருக்கு என எதிர்பார்க்கிறேன். இந்த ஆண்டு தங்கத்தின் விலை 65% உயர்ந்த நிலையில், மீண்டும் குறையும் என்று எதிர்பார்க்கிறேன்" இவ்வாறு கூறினார்.
தங்கம் விலை : சந்தையின் எதிர்வினையும், எதிர்காலக் கண்ணோட்டமும்
அமெரிக்க டாலர் வலிமை பெற்றதால் வியாழக்கிழமையும் தங்க விலைகள் மீண்டும் குறைந்தது. வட்டி விகிதங்களில் ஃபெடரல் ரிசர்வ் இன் அடுத்த நடவடிக்கை குறித்து மேலும் தெளிவு பெறுவதற்காக முதலீட்டாளர்கள் இப்போது வரவிருக்கும் அமெரிக்கப் பணவீக்கத் தரவை உற்றுநோக்கி வருகிறார்கள். அதுதான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க போகிறது.
ஸ்பாட் தங்கம் வியாழக்கிமை நிலவரப்படி 0.3% குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,082.95 ஆக இருக்கிறது. அதேசமயம் அமெரிக்கத் தங்கத்தின் எதிர்கால ஒப்பந்தங்கள் 0.8% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,097.40 ஆக இருக்கிறது. டாலர் குறியீடு 0.1% உயர்ந்ததால், மற்ற நாணயங்களைக் கொண்டவர்களுக்குத் தங்கம் விலை உயர்ந்ததாக மாறி இருக்கிறது. உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் விலை குறைவின் தாக்கம் இருக்கிறது.
தங்கம் விலை பற்றி மேத்தா ஈக்விட்டிஸ் லிமிடெட் நிறுவனத்தின் ராகுல் கலந்த்ரி கூறுகையில், அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகள் மேம்படுவதற்கான நம்பிக்கை மற்றும் இந்தியாவில் தங்கத்தின் தேவை குறைந்தது ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குசந்தைக்கு மாறதொடங்கி உள்ளார்கள். பலரும் தங்கத்தை விற்று லாபம் பார்த்த காரணத்தால் கடந்த இரண்டு நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை பெரிய அளவில் சரிந்தது. தற்போது தங்கம் லை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,050 மற்றும் $48 என்ற அளவில் நிலைபெற்றுள்ளது.
குறுகிய காலச் சரிவு இருந்தபோதிலும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மேலும் விகிதக் குறைப்பு குறித்து எதிர்பார்ப்பு மற்றும் உலகப் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கம் கடந்த ஆண்டை விட இன்னும் மிக அதிக விலையில் தான் தொடர்ந்து வைத்திருக்கும்" என்றார். சர்வதேச முதலீட்டாளர்கள் இப்போது அமெரிக்காவின் பணவீக்கத் தரவு மற்றும் மத்திய வங்கியின் முடிவுகளில் கவனம் செலுத்துவதால், வரவிருக்கும் வாரங்கள் தங்கம் மற்றும் வெள்ளி நிலைபெறுமா அல்லது மீண்டும் ஒரு சுற்று வீழ்ச்சியைக் காணுமா என்பதைத் தீர்மானிக்கும்.












Click it and Unblock the Notifications