லாஜிக்கே இல்லையே! ஆளுநர் ஏன் இப்படி செய்தார்? திமுகவிற்குத்தான் ப்ளஸ் பாயிண்ட்! அடித்து சொன்ன புள்ளி
ஆளுநர் செய்வது லாஜிக்கே இல்லாத செயல், என்று சுமந்த சி ராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது திமுகவிற்கு சாதகமாக முடியும் என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்தை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு சட்ட ரீதியாக தகுதி உள்ளதா என்ற விளக்கத்தை அவர் கேட்டு உள்ளார்.
இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இரண்டாவது முறை நிறைவேற்றப்படுவதால் இந்த சட்டத்தை கண்டிப்பாக டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் ஆளுநர் ஆர். என் ரவி இருக்கிறார்.
ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆளுநர்
ஆளுநர் என்ன காரணத்திற்காக ஆன்லைன் ரம்மி மசோதாவை திருப்பி அனுப்பினார் என்று காரணத்தை காட்டி இருக்கிறார். எப்படியும் தமிழ்நாடு சட்டசபையில் இதை நிறைவேற்றுவார்கள். அப்போது ஆளுநர் இதில் கையெழுத்து போட்டுதான் ஆக வேண்டும். அப்படி கையெழுத்து போட்ட பின் அதை எதிர்த்து ஆன்லைன் ரம்மி செயலியின் குழுவினர் வழக்கு தொடுப்பார்கள். ஆளுநரின் நோக்கத்தை பற்றி பேச விரும்பவில்லை. ஆளுநர் ஏன் இப்படி செய்கிறார் என்றே தெரியவில்லை. இது திமுகவிற்கே சாதகமாக முடியும். திமுக முயல்கிறது. அதை ஆளுநர் தடுக்கிறார் என்ற பிம்பத்தைதான் இது ஏற்படுத்தும்.

ஆர் என் ரவி
ஆளுநர் ஏன் இப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. அவர் கையெழுத்து போட்டு இருக்கலாம். அப்படி செய்து இருந்தாலும் அது கோர்ட்டில் இருக்காது. ரம்மி என்பது கேம் ஆப் ஸ்கில்.. அதாவது திறமைக்கான விளையாட்டு என்று கோர்ட் சொல்கிறது. ஆனால் எதிரே கணினி விளையாடுகிறது. ரம்மி நிறுவனம் ஏமாற்றி விளையாடுகிறது என்று வாதம் வைக்கிறார்கள். ஆனால் அதை நிரூபிக்க வேண்டும். ரம்மி நிறுவனங்களின் சோர்ஸ் கோடுகளை வாங்கி வேண்டுமென்றால் விசாரிக்கலாம். முதலில் அதை நிரூபிக்க வேண்டும். இது திறமையான ஆட்டம் இல்லை, அதிர்ஷ்டத்திற்கான ஆட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும்.

தவறு
அப்படியே நிரூபித்தாலும் கூட இதை எப்படி செயல்படுத்துவார்கள்? கேரளாவில் தடை கொண்டு வந்தனர். அதை கோர்ட் நீக்கிவிட்டது. கர்நாடகாவில் போட்டார்கள். அங்கேயும் செல்லாது என்று சொல்லிவிட்டனர். தெலுங்கானாவில் இன்னும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாடு அரசு எப்படி இதை செயல்படுத்தும். ஒரு மாநிலத்தில் செயல்படும் செயலியை எப்படி இன்னொரு மாநிலத்தில் செயல்படுத்துவார்கள். ஜியோ லொகேஷன் சென்சிங் வைத்து தடை செய்யலாம். இருந்தாலும் ஜியோ சென்சிங் முறையை எளிதாக காலி செய்து செயலியை பயன்படுத்த முடியும். இதனால் தடை செய்தாலும் பயன் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏன் இப்படி
அதோடு தினமும் நிறைய செயலிகள் வருகிறது. தமிழ் ராக்கர்ஸ் புதிய புதிய யுஆர்எல் போட்டு படம் ஏற்றுவது போலத்தான் இதுவும். தினமும் வரும் செயலிகளை எப்படி தடுப்பார்கள். இதை எல்லாம் யோசித்து செய்தார்களா? அல்லது ஏன் இப்படி செய்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளன. ஆளுநர் இதை எல்லாம் யோசித்து செய்தாரா? இது திமுகவிற்குதான் சாதகமாக முடியும் என்று அவருக்கு தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரம்மி நிறுவன குழுவினருடன் இவர் ரகசியமாக சந்திக்கவில்லை. வெளிப்படையாகத்தான் சந்தித்தார்.

தவிர்த்து இருக்கலாம்
அவர் இந்த சந்திப்பை தவிர்த்து இருக்கலாம். ஆளுநர் இதன் நீதிபதி கிடையாது. சட்டம் சரி என்றால் கையெழுத்து போட்டு இருக்கலாம். அல்லது மறுநாளே திருப்பி அனுப்பி இருக்கலாம். திருப்பி அந்த சட்டம் வரும் போது அதை டெல்லிக்கு அனுப்பி இருக்கலாம். டெல்லிக்கு அனுப்பி இருந்தால் சட்டம் நிறைவேறி இருக்கும். எப்படியும் கோர்ட்டில் சட்டம் தோல்வி அடைந்து இருக்கும். அப்போது திமுக மீதே விமர்சனம் வைக்கப்படும். ஆனால் ஆளுநர் தன் மீது மக்கள் கோபத்தை உருவாக்கி அரசுக்கு அனுதாபம் ஏற்படுத்துகிறார். ஆளுநர் செய்வது லாஜிக்கே இல்லாத செயல், என்று சுமந்த சி ராமன் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications