லென்டர்ன் சிக்னலில் நடுரோட்டில் ஹாயாக காலை நீட்டி படுத்த இளம்பெண்.. அடுத்த நிமிடமே நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோஷியல் மீடியாவில் எப்படியாவது ஃபேமஸ் ஆகிவிட வேண்டும், ஒரே வீடியோவில் வைரலாகிட வேண்டும் என்ற மோகம் இளைய சமுதாயத்தினரை ஆட்டுவித்து கொண்டிருக்கிறது. இதற்கான வீடியோக்களை எடுப்பதற்காக, சிலர் ஆபத்தான ரிஸ்க்குகளில் இறங்கவும் தயங்குவதில்லை.. அப்படித்தான் இளம்பெண் ஒருவர், நடுரோட்டில் செய்த காரியம், மத்திய பிரதேச போலீசாரையே அதிர வைத்து வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரை சேர்ந்தவர் அந்த பிரகிருதி கவுர்.. இன்ஃப்ளூயன்சரான இவர், இன்ஸ்டாகிராமில் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக, நேற்று இந்தூர் நகரப் பகுதிக்கு சென்றிருக்கிறார்.

Indore Influencer Prakriti Gaur Lantern Square Signal Indore Police Action Madhya Pradesh News

இந்தூர் நகரில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் லென்டர்ன் சதுக்க பகுதிக்கு சென்ற பிரகிருதி கவுர், அங்கு சிக்னல் போடப்பட்டிருப்பதையும், அதனால் வாகனங்கள் அனைத்தும் சிவப்பு விளக்கில் எரிந்து அணிவகுத்து நின்றிருந்ததையும் கண்டார்.. உடனே அந்த காட்சியை அப்படியே வீடியோ எடுகக முயன்றார்..

இந்தூர் இன்ஃப்ளூயன்சர்

எதைப் பற்றியும் கவலைப்படாமல் திடீரென சாலையின் நடுவில் அமைந்துள்ள ஜீப்ரா கிராசிங் பகுதியில் கால் நீட்டி படுத்துக் கொண்டார்.. கொஞ்சமும் பயமும், அக்கறையும் இல்லாமல். நடுரோட்டிலேயே விதவிதமாக போஸ் கொடுத்து ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்துள்ளார். இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.. பிறகு சிக்னல் போட்டுவிடவும், அவரவர் இந்த செயலால், தலையிலடித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

ஆனால் அந்த பெண்ணோ, உடனே அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்து விட்டார்.. அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோவை பார்த்து ஒட்டுமொத்த இணையவாசிகளும் கொந்தளித்து விட்டார்கள்.. வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும், டிராபிக்குக்கும் இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்ட இந்த செயலுக்குக் கடுமையான கண்டனங்களை பதிவு செய்ய துவங்கி விட்டனர்.

நடுரோட்டில் காலை நீட்டி படுத்த இளம்பெண்

இன்ஸ்டாகிராமில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கிறாராம் இந்த பிரகிருதி கவுர், இப்படிப்பட்ட பொறுப்பற்ற முறையில் பொதுஇடங்களை ஆக்கிரமித்து சாகசங்களில் ஈடுபட்டது போலீசாரின் கவனத்திற்கும் உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தூர் போலீஸின் சோஷியல் மீடியா கண்காணிப்புப் பிரிவு தீவிரமாக களமிறங்கி அந்தப் பெண்ணின் ஐடி மற்றும் விவரங்களை முழுமையாகத் சேகரித்தது.

இந்த விவகாரம் குறித்துப் கிரைம் பிராஞ்ச் கூடுதல் டி.சி.பி ராஜேஷ் தண்டோதியா செய்தியாளர்களிடம் பேசும்போது, "பொதுமக்களின் உயிரைக் பணையம் வைத்துவிட்டு இதுபோன்று போக்குவரத்து சிக்னல்களில் வண்டிகளை மறித்து ரீல்ஸ் செய்வது முற்றிலும் சட்டவிரோதம்.. இதற்குப் பின்னால் இருப்பவர்கள் எத்தகைய இன்ஃப்ளூயன்சர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று திட்டவட்டமாக எச்சரித்தார்.

Indore Influencer Prakriti Gaur Lantern Square Signal Indore Police Action Madhya Pradesh News

விளக்கம் தந்த பிரபலம்

போலீசார் தனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதையும், அவர்கள் தன்னை நோக்கி நெருங்குவதையும் உணர்ந்த பிரகிருதி கவுர், உடனே பதறிப்போய், தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் இன்னொழ விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், "சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.. அந்த சில நொடிகளுக்குள் மட்டுமே நான் அப்படி செய்தேன்.. வேண்டுமென்று எந்தவிதமான போக்குவரத்து விதிகளையும் மீறும் நோக்கம் எனக்கு இல்லை.. எனினும் என்னுடைய செயலுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்" என்று வீடியோ வெளியிட்டுள்ளார்,

போலீஸ் ஆக்‌ஷன்

ஆனாலும் இந்த விளக்கத்தையெல்லாம் போலீசார் ஏற்கவில்லை.. சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதால், அவர் மீது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, அந்த ரீல்ஸ் வீடியோவை எடுக்கப் பயன்படுத்தப்பட்ட அவரது செல்போனையும் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். அதுமட்டுமல்ல, இனிமேல் இதுபோன்ற விவகாரங்களில் எத்தகைய தளர்வுகளும் காட்டப்படாது என்றும் கறாராக தெரிவித்து விட்டனர்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+