பரம ரகசியமா? சந்திரயான் நிலவில் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோவை டெலிட் செய்த இஸ்ரோ.. இதுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவில் இன்று சந்திரயான் 2 மூலம் எடுக்கப்பட்ட சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் புகைப்படத்தை இஸ்ரோ டெலிட் செய்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ டெலிட் செய்ய என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. இதன் விக்ரம் லேண்டர் நேற்று முதல்நாள் நிலவில் தரையிறங்கியது. சாப்ட் லேண்டிங் முறை மூலம் மெதுவாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது.

Why did ISRO Chandraayan 3 delete the photo of Vikram lander from top angle?

இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்து உள்ளது. அதோடு இல்லாமல் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் படைத்து உள்ளது. அதை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் தரையிறங்கியது.

பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. நிலவின் தெற்கு பகுதி என்பது மைனஸ் 240 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் உள்ள பகுதி. 2 பில்லியன் ஆண்டுகளாக.. அதாவது கிட்டத்தட்ட நிலவு தோன்றிய காலத்தில் இருந்தே நிலவின் இந்த பகுதியில் பெரிதாக சூரிய வெளிச்சம் படவில்லை. இதன் கோணம் காரணமாக 10 சதவிகிதம் அளவில் மட்டுமே சூரிய வெளிச்சம் இங்கே உள்ளது.

அதனால் இங்கே தண்ணீர் உறைந்து உள்ளே காணப்படுகிறது. அதாவது உள்ளே ஐஸ் பாறைகளாக தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கண்டுபிடிக்கவே நிலவின் தென் பகுதிக்கு இஸ்ரோவின் விக்ரம், பிரக்யான் சந்திரயான் 3 மூலம் அனுப்பப்பட்டு உள்ளது.

தீவிர ஆராய்ச்சி: இவை இரண்டும் தற்போது நிலவின் தென் துருவத்தில் தீவிர ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் நிலவில் இன்று சந்திரயான் 2 மூலம் எடுக்கப்பட்ட சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் புகைப்படத்தை இஸ்ரோ டெலிட் செய்துள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ டெலிட் செய்ய என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதாவது நான் உன்னை உளவு பார்க்கிறேன் என்ற கேப்ஷனுடன் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டரை உளவு பார்ப்பது போல நிலவின் மேல் பகுதியில் இருந்து டாப் ஆங்கிளில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இதை ஷேர் செய்து இருந்த இஸ்ரோ உடனே டெலிட் செய்துள்ளது.

காரணங்கள்: இஸ்ரோ இதை டெலிட் செய்ய பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. இந்த புகைப்படத்தை ஆர்பிட்டர் எடுத்து இருக்காது. ப்ரோபல்ஷன் மாடலில் இருக்கும் நிலவை நோக்கிய கேமரா எடுத்திருக்கலாம்.
2. இந்த போட்டோவை பகிர்ந்தால் நிலவு, விக்ரம் லேண்டர் தொடர்பான சீக்ரெட்டுகள் கசியும் என்பதால் அதை வெளியிட விரும்பவில்லை.

3. ஆராய்ச்சிகள் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட இஸ்ரோ விரும்பவில்லை.
4. இந்த புகைப்படத்தை வொர்க் செய்யாமல் அப்படியே இஸ்ரோ வெளியிட்டுவிட்டது. இதை எடிட் செய்து மக்களுக்கு புரியும் வகையில் மீண்டும் வெளியிடும் என்பன உள்ளிட்ட காரணங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சந்திரயான் 2 மூலம் எடுக்கப்பட்ட சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் புகைப்படத்தை இஸ்ரோ டெலிட் செய்தது ஏன் என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. விரைவில் இதற்கு இஸ்ரோ விளக்கம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+