சல்லி சல்லியா நொறுக்கிய பாஜக.. ஜவாஹிருல்லாவுக்கு வந்த ஆவேசம்.. "மதவாத போர்".. அவங்க பிளானே இதுதான்
ஜவாஹிருல்லா, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: டெல்லியில் இஸ்லாமியர்கள் குடியிருப்பை புல்டோசர் வைத்து தகர்க்கும் செயலுக்கும், சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக மதவாத போரை நடத்தி கொண்டிருப்பதற்கும் ஜவாஹிருல்லா கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.. அதில், மாநில தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கொந்தளித்து போய் பேசினார்.. குறிப்பாக, டெல்லியில் உள்ள இஸ்லாமியர்கள் குடியிருப்பை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா வேதனையுடன் சொன்னதாவது: "சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர்கள் இது தொடர்பாக வாதிட்டு வந்தனர்... கோர்ட்டின் அமர்வும், டெல்லி இஸ்லாமிய குடியிருப்புகள் இடிப்பு நடவடிக்கையை நிறுத்த உடனடியாக உத்தரவு போட்டது.. ஆனால் அந்த பேச்சை யாருமே கேட்கவில்லை.. கோர்ட் உத்தரவையும் மீறி தொடர்ச்சியாக புல்டோசர் கொண்டு முஸ்லிம்கள் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

பிருந்தா காரத்
இப்படிப்பட்ட சூழலில்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், நேரடியாகவே சுப்ரீம்கோர்ட் உத்தரவுடன் களத்திற்கு சென்றுவிட்டார்.. புல்டோசர் முன்பு நின்று கொண்டு, அதை தடுக்கக்கூடிய வீரமிக்க செயலை எல்லாம் நாம் கண்ணெதிரிலேயே பார்த்தோம்.. பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆள்கிறது, அதற்காக அரசியலமைப்பு சட்டத்தைகூட மதிப்பது இல்லையா? அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கிற விதிகளை எல்லாம் மீறுகிற வகையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அத்துமீறல்கள்
முழுக்க முழுக்க டெல்லியில் சுப்ரீம் கோரட்டின் உத்தரவு மீறப்பட்டுவிட்டது.. ஆக்கிரமிப்புகள் என்று சொன்னாலும் கூட அவர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் அளித்து அவர்களிடமிருந்து உரிய விளக்கம் கேட்டு அதன்பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், ஆனால் அதைகூட டெல்லி அரசு செய்யவில்லை என்பது வருத்தம்தான்..

ஆம் ஆத்மி
பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எல்லாம், டெல்லியை ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய ஆம் ஆத்மி கட்சியும், உறுதுணையாக இருந்து வருகிறது.. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பற்றியும் வட டெல்லி மாநகராட்சி அனுப்பியிருக்கும் கடிதத்தில் டெல்லி அரசாங்கத்தின் பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை ஆகியவை எல்லாம் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று சொல்லப்பட்டு அவர்களின் ஒத்துழைப்புடன் தான் இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

பிருந்தா காரத்
தமக்கு வாக்களித்த மக்களின் வீடுகள் இடிக்கப்படுவது குறித்து கெஜ்ரிவால் இதுவரை வாய் திறக்கவேயில்லை... சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக மதவாத போர் தலைநகரில் நடந்து கொண்டிருக்கிறது.. பிருந்தா காரத் மட்டும்தான், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி உள்ளார்.. அது ஒன்றுதான் இஸ்லாமியர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.. அதேசமயம், சுப்ரீம்கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர்களுக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications