நேற்று ஏர்டெல்.. இன்று முகேஷ் அம்பானியின் ஜியோ.. எலான் மஸ்க் எடுத்து வைக்கும் அடியே வேற மாதிரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிற்கு ஸ்டார்லிங்க் இணைய சேவையை கொண்டு வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேருவது குறித்து ஏர்டெல் அறிவித்த மறுநாளே, முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், எலோன் மஸ்க்கின் நிறுவனத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக தகவல் தொடர்பு சந்தையில் பெரும்பான்மையை கையில் வைத்துள்ள ஜியோ, ஏர்டெல் இரண்டு நிறுவனங்களுமே ஸ்டார்லிங்க்கின் செயற்கைகோள் இணைய சேவையை கொண்டுவரவிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்த பாரதி ஏர்டெல் ஸ்பேஸ்எக்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டிருந்தது. இதன்மூலம் எலான் மஸ்க்கின் நிறுவனம் இந்தியாவில் ஏர்டெல் உடன் இணைந்து அதிவேக செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கப்போவது நேற்று உறுதியாகி இருந்தது.

chennai Mukesh Ambani jio Airtel Elon Musk Starlink

இதுபற்றி ஏர்டெல் நிறுவனம் இந்த ஒப்பந்தம் பற்றி நேற்று முறைப்படி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதன்படி இ ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்துவதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதை நேற்றைய அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது. எனினும் இந்த ஒப்பந்தம் நாட்டில் ஸ்டார்லிங்க் சேவைகளை விற்பனை செய்வதற்கான ஸ்பேஸ் எக்ஸிற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்று கூறப்பட்டிருந்தது.

ஏர்டெல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இந்தியா முழுவதும் இணைய இணைப்பை ஒத்துழைத்து விரிவுபடுத்துவதற்கு விரிவான வழிகளை ஆராயும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் அதன் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை விற்பனைக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஸ்டார்லிங்க்கின் அதிவேக செயற்கைக்கோள் இணையத்தை வணிகங்களுக்கு வழங்கப்படும் என்றும், டிஜிட்டல் சேவை குறைபாட்டை குறைக்க உதவும் வகையில், கிராமப்புற பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் தொலைதூர சமூகங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், இணைய சேவை கொண்டு வர இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏர்டெல்லின் ஒப்பந்தம் வெளியான மறுநாளே முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், எலான் மஸ்க்கின் நிறுவனத்துடன் இதேபோன்ற ஒப்பந்தத்தை அறிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் அதன் ஆன்லைன் ஸ்டோர் பிரண்டுகள் மூலம் ஸ்டார்லிங்க் சேவைகள் கிடைக்கும் என்று இந்தியாவில் ஸ்டார்லிங்கை விற்க ஸ்பேஸ்எக்ஸ் அதன் சொந்த அங்கீகாரங்களைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உட்பட்டது என்றும் கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கு, நமது நாடு எவ்வாறு ஸ்பெக்ட்ரத்தை வழங்க வேண்டும் என்பது குறித்து இந்தியாவின் மிகப்பெரிய செல்போன் மற்றும் இணைய சந்தாதாரர்களை கொண்டுள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும் மோதிக் கொண்டிருந்த நிலையில், இரு நிறுவனங்களுமே எலான் மஸ்க்கின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன. முன்னதாக செயற்கைக்கோள் இணைய சேவைக்கான இணைய சேவைக்கான ஸ்பெக்ட்ரம்மை விற்க ஏலம் நடத்த வேண்டு என்று ரிலையன்ஸ் வலியுறுத்தியது, ஆனால் உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப நிர்வாக ரீதியாக அதை ஒதுக்க வேண்டும் என்று எலான் மஸ்க்கின் நிறுவனம் விரும்பியது. கடைசியில் எலான் மஸ்க்கின் விருப்பத்திற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியது.

அதனை தொடர்ந்து நேற்று, ஸ்டார்லிங்க் இணையத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக பாரதி ஏர்டெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது இந்தியாவில் கையெழுத்திடப்பட்ட முதல் ஒப்பந்தமாகும். இப்போது ஜியோவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று வந்த நிலையில், அங்கு எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார். அதன்பிறகு அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களுமே ஸ்டார்லிங்க் இணைய சேவை வழங்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையதள சேவையை பொறுத்தவரை ஃபைபர் அல்லது செல்லுலார் நெட்வொர்க்குகள் இல்லாத இடத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் தொலைதூர மற்றும் இணைய சேவை குறைவாக உள்ள மலைபகுதிகளில் மற்றும் கிராம பகுதிகளில் உள்ளவர்களுக்கு சிறப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.

ஸ்டார்லிங்க் எப்படி இருக்கும்:

ஸ்டார்லிங்க் என்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம் பூமியைச் சுற்றி வரும் வகையில் பூமி சுற்றுப்பாதையில் (LEO) ஏராளமான செயற்கைக்கோள்களை நிறுவியுள்ளது. அதன் மூலம் தடையற்ற மிக அதிவேக இணைய சேவையை உலகம் முழுவதும் வழங்கி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+