என்ன வக்கிரம் இது? ஒரு பொண்ணு.. பின்னாடியே 4 ஆண்கள்.. கொடூர விளம்பரம்.. பதறி "ஆக்சன்" எடுத்த அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் வைரலாகி வந்த விளம்பரம் ஒன்றை உடனடியாக நீக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

இப்போதெல்லாம் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்கள் புதிய யுக்தியோடு வெளிவர தொடங்கி உள்ளன. மார்க்கெட்டில் மக்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக புதிய யுக்தியில் பல்வேறு விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

அப்படி வெளியான வாசனை திரவிய விளம்பரம் ஒன்றை மத்திய அரசு உடனடியாக நீக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

 வாசனை திரவியம்

வாசனை திரவியம்

Layer'r Shot எனப்படும் வாசனை திரவியத்தின் விளம்பரத்திற்குத்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த விளம்பரம் இணையம் முழுக்க சர்ச்சையானது. அதில் ஷாப்பிங் காம்பிளக்ஸ் ஒன்றில் பெண் ஒருவர் பொருட்களை வாங்குவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவருக்கு பின் நான்கு இளைஞர்கள் நின்று கொண்டு பல்வேறு கமெண்ட்களை அடித்து வருகின்றனர்.

தவறான காட்சிகள்

தவறான காட்சிகள்

இதில் அந்த இளைஞர்கள் செய்யும் கமெண்ட்கள் முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசன கமெண்ட்கள் ஆகும். அந்த பெண்ணை பற்றி பேசுவது போல் சில கொடூரமான வார்த்தைகள் இந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. கடைசியில் அந்த இளைஞர்கள் 4 பேரும் அந்த பெண்ணை பற்றி கமெண்ட் அடிக்கவில்லை.. அருகில் இருக்கும் ஒற்றை Layer'r Shot திரவியத்தை பார்த்து இவர்கள் கமெண்ட் அடிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

சர்ச்சை

சர்ச்சை

இதை நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஒரு பெண்ணை பார்த்து கமெண்ட் அடிப்பது எல்லாம் விளம்பரமா என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விளம்பரத்தை நீக்கும்படி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது. யூ டியூப் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு விளம்பரத்தை நீக்கும்படி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது.

விளம்பர விதிகள்

விளம்பர விதிகள்

விளம்பர விதிகளை மீறிவிட்டதாக கூறி இந்த விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் Advertising Standards Council of India (ASCI) எனப்படும் விளம்பர கட்டுப்பாட்டு அமைப்பும் இந்த விளம்பரம் விதிகளை மீறிவிட்டதாக தெரிவித்துள்ளது. விளம்பர நெறிமுறைகளை மீறி இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை உடனடியாக அந்த நிறுவனம் நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+