இந்த மாதம் பலருக்கும் மின் கட்டணத்துடன் கூடுதல் கட்டணம் வந்தது ஏன்? மின்சார வாரியம் விளக்கம்
சென்னை: விஜி என்பவருக்கு இந்த மாதம் 600 யூனிட் பயன்படுத்தியதற்கு ரூ.2750 கட்டணம் வந்துள்ளது. ஏசிசிடி கட்டணம் 1030 என்று வந்துள்ளது. மொத்தம் 3780 ரூபாய் கட்டணம் வந்திருந்தது. இதுபற்றி விளக்கம் தருமாறு அவர் கேட்டிருந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
ACCD- Addl Current Consumption Deposit என்பது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தங்களின் பாதுகாப்பு வைப்பு தொகை பரிசீலிக்கப்படும். வட்டி பணமும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்சார வாரியம் என்ன சொல்ல வருகிறது என்றால், எல்லாரும் மின் இணைப்பு பெறும் பொழுது ஒரு டெபாசிட் தொகை கட்டியிருப்போம்.. ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக இவ்வளவு மின்சார பயன்பாடு ஒதுக்கீடு கணக்கு உண்டு.
அந்த அளவை தாண்டும் பொழுது.. நமக்கு நமது இணைப்பின் பயன்பாடு வரம்பை உயர்த்தி அதற்கு ஏற்றார் போல டெபாசிட் தொகையின் பற்றாக்குறை தொகை நம்மிடம் வசூலிக்கப்படும். அதுதான் ACCD(Additional current consumption deposit) இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சரிபார்க்கப்பட்டு ஏப்ரல்/மே மாத மின் கட்டணத்துடன் வசூலிக்கப்படும்.
ACCD கணக்கிடும் முறை: கடைசி 12 மாதங்களுக்கு நம்முடைய மின்கட்டணத்தின் சராசரி 3 மடங்கு தொகை டெபாசிட் தொகையில் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு கடைசி 12 மாதத்தில் நம்முடைய மொத்த மின் கட்டணம் 12 ஆயிரம் எனில்.. அதற்கான சராசரி தொகை 1000 அதன் 3 மடங்கு தொகை 3000 ரூபாய் நம்முடைய டெபாசிட்டில் இருக்க வேண்டும். ஒருவேளை 2000 உங்கள் டெப்பாசிட் இருக்கும் பட்சத்தில்.. மீதம் உள்ள 1000 ரூபாய் உங்களுடைய மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
ACCD- Addl Current Consumption Deposit
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) June 10, 2023
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தங்களின் பாதுகாப்பு வைப்பு தொகை பரிசீலிக்கப்படும். வட்டி பணமும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும். மேலும் அறிய, https://t.co/y2Qm4LE8va
கட்டணம் 12 வது கேள்வி
ஒருவேளை உங்களின் வருட மொத்த மின் கட்டணமே.. 6000 எனில் 6000/12 = 500 அதன் 3 மடங்கு தொகை 1500 ஏற்கனவே 2000 ரூபாய் டெபாசிட்டில் இருந்தால் மேற்கொண்டு எந்த தொகையும் வசூலிக்கப்படாது. ஒருவேளை தங்களுடைய மின் இணைப்பை திரும்ப ஒப்படைத்தால்.. இந்த டெபாசிட் தொகையை மின்வாரியம் தங்களுக்கு திருப்பி தர வேண்டும். இதுதான் நடைமுறையாகும். இதை பற்றி தான் தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி தான் விஜி என்பவருக்கு இந்த மாதம் 600 யூனிட் பயன்படுத்தியதற்கு ரூ.2750 கட்டணம் வந்துள்ளது. ஏசிசிடி கட்டணம் 1030 என்று வந்துள்ளது. மொத்தம் 3780 ரூபாய் கட்டணம் வந்திருந்தது. அதாவது கடைசி 12 மாதங்களுக்கு அவருடைய மின்கட்டணத்தின் சராசரி 3 மடங்கு தொகை டெபாசிட் தொகையில் இல்லை. அதாவது இரண்டு மடங்கு தான் இருந்தது. அதனால் தான் அவருக்கு ஏசிசிடி கட்டணம் 1030 சேர்த்து மொத்தம் 3780 ரூபாய் கட்டணம் வந்துள்ளது.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications