Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவமானப்படுத்தப்பட்டாரா? ரஜினியை அன்று ஓரம்கட்டிய யோகி ஆதித்யநாத்! இப்போ என்ன பண்ணி இருக்கார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேசத்தில் அவமதிக்கப்பட்டதாக செய்தி ஒன்று இணையத்தில் தீவிரமாக உலவ தொடங்கி உள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

2020ல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். அப்போதே அதற்கு பின் பாஜக இருப்பதாக கூறப்பட்டது. அதாவது தமிழ்நாட்டில் பாஜக நேரடியாக கால் பதிக்க முடியாத காரணத்தால் ரஜினிகாந்த் மூலம் பாஜக களமிறங்குகிறது. பாஜக - ரஜினிகாந்த் கூட்டணி வைப்பார்கள் என்றும் செய்திகள் வந்தன.

Why did not Yogi Adityanth watch movie with Rajinikanth but watched Gaddar 2 movie?

அதன்பின் ரஜினிகாந்த் பல முறை பாஜகவிற்கு ஆதரவாக பேசினார். அதேபோல் பாஜகவின் செயல்பாடுகளை பாராட்டும் விதமாகவும் பேட்டி அளித்தார். இதில் முக்கியமானது.. ரஜினி திராவிட அரசியல் உள்ள தமிழ்நாட்டில் ஆன்மீக அரசியல் அளிப்பேன் என்றார். அவருக்கு பின் பாஜக இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கடைசியில் உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி அரசியலில் இருந்து விலகினார். தன்னால் வெளியே வர முடியாது, உடல்நிலை சரியில்லை என்று ரஜினி இப்படி கூறினார். ஆனால் என்னவோ அதன்பின் தொடர்ந்து பல்வேறு படங்களில் ரஜினி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில்தான் மீண்டும் பாஜகவுடன் நெருக்கம் ஆகும் விதமாக ரஜினிகாந்த் ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார்.

பலருடன் சந்திப்பு: முதலில் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உடன் இணைந்து ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் பார்ப்பதாக இருந்தது.

ஆனால் ஜெயிலர் படம் பார்க்க ரஜினிகாந்த்திற்கு ஆதித்யநாத் நேரம் ஒதுக்கவில்லை. ஜெயிலர் படத்தை ரஜினியுடன் சேர்ந்து பார்க்காமல் துணை முதலமைச்சர் மௌரியாவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுப்பி வைத்தார். அதன்பின் வரிசையாக பாஜக தலைவர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். சில அமைச்சர்களையும் அவர் சந்தித்தார்.

இந்த விவகாரத்தில் ஜெயிலர் படம் பார்க்க ரஜினிகாந்த்திற்கு ஆதித்யநாத் நேரம் ஒதுக்கவில்லை. ஜெயிலர் படத்தை ரஜினியுடன் சேர்ந்து பார்க்காமல் துணை முதலமைச்சர் மௌரியாவை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில் அவரும், படத்தை முழுமையாக பார்க்காமல் பாதியிலேயே எழுந்து சென்று உள்ளார்.

என்ன நடந்தது?: இந்த நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேசத்தில் அவமதிக்கப்பட்டதாக செய்தி ஒன்று இணையத்தில் தீவிரமாக உலவ தொடங்கி உள்ளது. ரஜினிகாந்துடன் படம் பார்க்க நேரம் இல்லை என்று கூறிய யோகி ஆதித்யநாத் வேறு ஒரு இந்தி படத்தை பார்த்துள்ளார்.

பாலிவுட்டில் வெளியான சன்னி தியோலின் 'கதர் 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், 'கதர் 2' படக்குழு சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது.

இவர்களுடன் சேர்ந்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் படம் பார்த்தார். ரஜினிகாந்துடன் படம் பார்க்க யோகி ஆதித்யநாத் விரும்பாத நிலையில், நேரம் ஒதுக்காத நிலையில் சன்னி தியோலின் 'கதர் 2' திரைப்பட குழுவுடன் அவர் படம் பார்த்தது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+