அன்று முதல் இன்று வரை தோல்வியையே சந்திக்கும் ஓபிஎஸ்.. இபிஎஸ்ஸுக்கு காத்திருக்கிறதா இன்னொரு வெற்றி?
சென்னை: அதிமுக இரட்டை தலைமைகளில் ஒருவராக திகழ்ந்த போதிலும் அன்று முதல் இன்று வரை ஓ பன்னீர் செல்வம் தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறார். ஆனால் 2017ஆம் ஆண்டு முதல் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி அளவில் எல்லாமே வெற்றிதான்.
ஜெயலலிதா மறைந்த போது சசிகலா முதல்வராக தயாரானதை அடுத்து ஓபிஎஸ் தர்மயுத்தத்தை நடத்தினார். சசிகலா ஆட்சியில் அமர தயாராக இருந்த நிலையில் அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேரிட்டது.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபை குழுத் தலைவராக தேர்வு செய்தார். இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வென்றார். முதல்வர் ஆனார். பின்னர் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடின.

இரட்டை இலை சின்னம்
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தனர். அப்போது சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் வைத்த நிபந்தனைகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து அதிமுக பொதுக் குழு கூட்டம் கூடி பொதுச் செயலாளர் எனும் பதவியை நீக்கியது. அதற்கு பதிலாக அதற்கு இணையான அதிகாரம் கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனும் இரட்டை தலைமை கொண்ட பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது முதலே இருவருக்கும் இடையே பனிப்போர் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. அது ஒவ்வொரு சமயத்திலும் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அரசல் புரசலாக தெரியவந்தது.

சட்டசபை தேர்தல்
முக்கியமாக 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் வரை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கியிருந்தது. இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வெளிப்படையாக வந்ததும் இருவருக்குள்ளும் இருந்த மோதல்கள் அப்பட்டமாக தெரிந்தது.

இரட்டை தலைமை
அதிமுகவுக்கு இரட்டை தலைமையே தொடர வேண்டும், பொதுக் குழு நடத்த தடை கோரிய வழக்கு, ஒருங்கிணைப்பாளர் பதவி, பொருளாளர் பதவி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி, அடிப்படை உறுப்பினர், அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பு, அதிமுக அலுவலகத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு என தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு சறுக்கல்களே!
Recommended Video

ஜெயலலிதா மறைவு
ஆனால் ஜெயலலிதா மறைவு முதல் இன்று வரை எடப்பாடி பழனிச்சாமி கட்சி ரீதியாக அவர் தொட்டதெல்லாம் வெற்றியானது. இதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமியை போல் ஓபிஎஸ் கட்சி நிர்வாகிகளை தன் வசப்படுத்த தவறிவிட்டார் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில் ஏனெனில் அதிமுக தலைமை அலுவலகம் இபிஎஸ் வசமானதை அடுத்து ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ் முயற்சித்தாலும் எம்எல்ஏக்களின் ஆதரவு, மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு யாருக்கு அதிகம் இருக்கிறதோ அவருக்கே சின்னமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த முயற்சியிலும் எடப்பாடி பழனிச்சாமியே வெற்றியடைய வாய்ப்புகள் உள்ளன என்றனர்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications