ப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி-வீடியோ

    சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் கைது இந்திய ஜனநாயகத்தில் இதுவரை நடந்திராத அநாகரிகம் என நெல்லையில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காக இன்று நெல்லை வந்தார் திருமாவளவன். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியவில்லை. ஆர்ப்பாட்டம் முழு வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    காஷ்மீர் பிரச்சனையை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 30- ந்தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சிதம்பரத்தை கைது செய்துள்ளது அநாகரீகமானது. 7 மாதங்களாக ப சிதம்பரத்தின் முன் ஜாமின் மனு அலைக்கழிக்கப்பட்டு நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இப்போது அவர் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

    பழிவாங்கியது மோடி அரசு

    பழிவாங்கியது மோடி அரசு

    5 ஆண்டுகளாக மோடி அரசை கடுமையாக விமர்சித்தவர் ப.சிதம்பரம். பொருளாதார பின்னடைவை கட்டுரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அம்பலப்படுத்தியதால் பழிவாங்கும் நடவடிக்கையாக முகாந்திரம் இல்லாத வழக்கில் மோடி அரசு அவரை கைது செய்துள்ளது.

    அநாகரீகமான செயல்

    அநாகரீகமான செயல்

    பொருளாதார குற்றங்களில் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை கைது செய்து இந்தியா கொண்டுவர ஒரு சதவீத அளவுகூட நடவடிக்கை, மோடி அரசு எடுக்கவில்லை. சிதம்பரத்தை அவமானப்படுத்தும் நோக்கில் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் கைது இந்திய ஜனநாயகத்தில் நடக்காத ஒரு அநாகரீகம். சிதம்பரத்தை கைது செய்ததில் பாஜக தலையீடு இல்லை என சொல்வதை பார்த்தால் பல பிரச்சனைகளை மூடி மறைக்க மக்களை திசைதிருப்பும் செயல்.. .

    மோடிக்கு ஆதரவாக செய்கிறார்கள்

    மோடிக்கு ஆதரவாக செய்கிறார்கள்

    நெல்லை கூடங்குளம் அணு உலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
    தொடர்ந்து எதிர்க்கும. காஷ்மீர் விவகாரத்தில் வெளிப்படையான ஆதரவை அதிமுக தெரிவித்து வருகிறது. மோடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக மீது காஷ்மீர் விவகாரத்தில் குற்றச்சாட்டை அமைச்சர்கள் தொடர்ந்து வைக்கின்றார்கள்.

    திருமாவளவன் அதிர்ச்சி

    திருமாவளவன் அதிர்ச்சி

    ஆசிரியர் தகுதி தேர்வில் பல லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதி சில நூறு ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது வேதனையளிக்கிறது.
    ஆசிரியர் தகுதி மற்றும் கல்வி திறன் குறித்தும் அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவேண்டும். கல்விதிறன் உயர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+