பட்ஜெட் பேச்சுக்கு இடையே.. சட்டென "அந்த" விஷயத்தை கையிலெடுத்த பிடிஆர்.. எதிர்பார்க்காத பாஜக! கப்சிப்

இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் சட்டசபையில் அமளி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் உரையை நிகழ்த்திக்கொண்டு இருந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென வேறு ஒரு விஷயத்தை பற்றி பேசியது அவையில் கவனத்தை ஈர்த்தது.

2023-24ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பல முக்கியமான அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவையில் வெளியிட்டார்.

பட்ஜெட்

பட்ஜெட்

அவர் தனது உரையில், வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும். மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும். நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4ல் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்யப்பட்டு உள்ளது. ₹4,236 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ₹40 லட்சத்தில் இருந்து ₹50 லட்சமாக அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை

சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும். வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய திருக்கோயில்களின் பெருந்திட்டப் பணிகள் ₹485 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். வரும் நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும், தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு, வரும் செப்டம்பர் 15 முதல் ₹1000 உரிமைத்தொகை வழங்கப்படும், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

பேசுகிறார்கள்

பேசுகிறார்கள்

இப்படி பேசிக்கொண்டே இருந்த போது திடீரென வட இந்தியர்கள் விவகாரம் பற்றி பேசினார். தமிழ்நாட்டில் சிலர் வட இந்திய விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார். சிலர் அதை வைத்து மோதலை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதை தடுத்து நிறுத்தி உள்ளோம். இது தொடர்பாக வதந்தி பரப்பிய நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு பிரச்சனைகளை சரி செய்து உள்ளது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பீகார்

பீகார்

பீகார் அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்பட்டு வடஇந்திய மக்களுக்கு தேவையான நம்பிக்கையை கொடுத்து உள்ளது, என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பாஜக இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து இருந்த நிலையில் பாஜகவிற்கு பட்ஜெட் உரையிலேயே பிடிஆர் பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு எதிராக அவையில் அப்போது இருந்த பாஜகவினர் 4 பேரும் எதுவும் பேசாமல் அமைச்சரின் உரையை கேட்டுக்கொண்டனர். வட இந்தியர் பாதுகாப்பு விவகாரம் தமிழ்நாட்டில் உச்சம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் கடந்த சில நாட்களாக பொய்யாக பல வீடியோக்கள் வேகமாக பரவின. இணையத்தில் இது தொடர்பாக பரவும் வீடியோக்கள் அனைத்தும் பொய்யானது ஆகும். பீகாரில் இந்த பொய்யான வீடியோக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் சட்டசபையில் அமளி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+